எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தொழில்நுட்ப பணியாளர் தேர்வுக்கு தனியாக வாரியம்

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 18, 2019
Share
Advertisement
 தொழில்,நுட்ப பணியாளர் ,தேர்வுக்கு, தனியாக ,வாரியம்

பொதுத்துறை மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில், தொழில் நுட்ப பணியாளர்களை தேர்வு செய்வதற்காக, புதிய வாரியத்தை ஏற்படுத்த, அரசின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், பொதுத்துறை நிறுவனங்களில், பணியாளர் தேர்வு,தனித்தனியாக நடந்து வருகிறது.சமீபகாலமாக, பணியாளர் தேர்வில், பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக, நீதிமன்றங்களுக்கு வழக்குகள் வருகின்றன. பிரச்னைகள்இதில், கீழ்நிலை பணியிடங்களுக் கான போட்டிகளில், கூடுதல் கல்வித்தகுதி உடையோரும் போட்டியிட்டு, பணிக்கு வருவதால், நிர்வாக ரீதியான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இது தொடர்பான வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, கீழ்நிலை பணியிடங்கள், தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கு, நடைமுறையை வகுக்க, அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து, தலைமை செயலர், கே.சண்முகம் தலைமையில், சமீபத்தில் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


உறுதி



அப்போது, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில், கீழ்நிலை மற்றும் தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்காக, தனி வாரியத்தை ஏற்படுத்துவது, குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதற்கான, பூர்வாங்க ஆய்வுகளை மேற்கொள்ளும்படி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதனால், பொதுத்துறை நிறுவன பணியாளர் தேர்வுக்கு, புதிதாக தனி வாரியம் உருவாவது உறுதியாகி உள்ளது.
-- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X