பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டரை நிமிடத்திற்கு ஒரு ரயில் செப்., 1 முதல் மெட்ரோ இயக்கம்

Added : ஆக 19, 2019
Share
Advertisement

மெட்ரோ ரயில்கள், செப்., 1 முதல், இரண்டரை நிமிட இடைவெளியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை - சென்ட்ரல் இடையே, வார நாட்களில், அதிகாலை, 4:30 மணியில் இருந்து, இரவு, 11:00 மணி வரை, மெட்ரோ ரயில்கள்இயக்கப்படுகின்றன.ஞாயிற்றுகிழமைகளில் காலை, 8:00 மணியில் இருந்து இரவு, 10:00 மணி வரை இயக்கப்படுகின்றன.இந்த ரயில்கள், அதிகாலை, 4:30 மணியில் இருந்து காலை, 6:00 மணி வரையும், இரவு, 10:00 மணியில் இருந்து, 11:00 மணி வரையும், 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.காலை, 6:00 மணியில் இருந்து இரவு, 10:00 மணி வரை, இருவழி தடத்திலும், 7 நிமிட இடைவெளியில், தினமும், 498 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.பயணியர் வருகை அதிகரிப்பால், தற்போது, கூடுதல் ரயில்கள் இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதனையொட்டி, பயணியர் போக்குவரத்து அதிகம் உள்ள, காலை, மாலை நேரங்களில் மட்டும், இரண்டரை நிமிட இடைவெளியில், ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.செப்.,1ம் தேதியில் இருந்து, காலை, மாலை வேளைகளில், இரண்டரை நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இதற்கான முறையான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X