பொது செய்தி

தமிழ்நாடு

கண்காட்சியில் அணிவகுத்த பழங்கால கார்கள்

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:''பாரம்பரியமிக்க கார்கள், கட்டடங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அனைவருக்கும் உள்ளது,'' என, பழங்கால கார்கள் கண்காட்சியை துவக்கி வைத்து, நடிகை ரேவதி பேசினார்.latest tamil newsபழங்கால வாகனங்களை பாதுகாக்க, 'மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்' என்ற அமைப்பு, 18 ஆண்டுகளாக செயல்படுவதுடன், ஒவ்வொரு ஆண்டும், கார் கண்காட்சி நடத்தி வருகிறது.'சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ' என்ற தலைப்பில் நடந்த, பாரம்பரிய கார் கண்காட்சி, சென்னை, திருவான்மியூரில், நேற்று நடந்தது.கண்காட்சியை, நடிகை ரேவதி துவக்கி வைத்தார்.

1904 முதல் 1980 வரை, புழக்கத்தில் இருந்த, 130 கார்கள், 45 இருசக்கர வாகனங்கள், கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.எம்.ஜி.ஆர்., ஏ.வி.மெய்யப்பன், எஸ்.எஸ்.வாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பயன்படுத்திய கார்கள், கண்காட்சியில் இடம் பெற்றன. மேலும், நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்டோர், திரைப்படங்களில் பயன்படுத்திய கார்களும் வைக்கப்பட்டிருந்தன.


latest tamil news

பழங்கால கார்கள் கண்காட்சியில் இடம் பெற்ற, புதுப்பொலிவுடன் பராமரிக்கப்பட்டு வரும் பழைய கார்கள். இடம்: திருவான்மியூர், சென்னை.
கர்நாடகா வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கிளப்பின், ஆறு கார்கள், பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. சிறப்பாக பராமரித்த கார்களை தேர்வு செய்து, பரிசு வழங்கப்பட்டது.ராஜேஷ் சோமசுந்தரம் என்பவரின், 1941ல் வெளிவந்த, பென்ஸ் கார், முதல் பரிசு பெற்றது. துரைமோகன், நர்ஜின்மஸ்வி மற்றும் ரஞ்சித்பிரதாப் ஆகியோரின் கார்கள், அடுத்தடுத்த பரிசுகளை வென்றன.

கண்காட்சியில், நடிகை ரேவதி பேசுகையில், ''பாரம்பரியமிக்க கார்கள், கட்டடங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அனைவருக்கும் உள்ளது. எந்த ஒரு பொருளையும், பழமை மாறாமல் பாதுகாப்பதில், மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும்,'' என்றார்.'மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்' தலைவர், பாலாஜி வாசுதேவன் கூறுகையில், ''ஆரம்பத்தில், 30 கார்களுடன் கண்காட்சியை துவக்கினோம். தற்போது, 200 உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்தடுத்த ஆண்டுகளில், கார், பைக் என, 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் இடம் பெறும்,'' என்றார்.


latest tamil newsநிகழ்ச்சியில், ஏ.வி.எம்., சரவணன், 'செலரிஸ் டெக்னாலஜிஸ்' நிறுவன தலைவர், சுமந்திரன், ராஜா முகர்ஜி, பார்த்தா பானிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கண்காட்சியில், பியுசியட், போர்டு, ஜாகுவார், ரோல்ஸ் ராயஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இடம் பெற்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sai mahesh - coimbatore,இந்தியா
19-ஆக-201915:52:34 IST Report Abuse
sai mahesh Revathiya yaar sir adhu 1980 let vandhavangala vintage kku vintage ing good
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X