பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை இடர்பாடுகள் காட்டி கஸ்தூரி ரங்கன் பரிந்துரை அமல்

Added : ஆக 19, 2019
Share
Advertisement

கம்பம் : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை சுற்றுப்புறச்சூழல் பிரதேசமாக அறிவிக்க கஸ்துாரி ரங்கன் கமிட்டி பரிந்துரை செய்தது.

மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, கோவா உள்ளிட்ட சில மாநிலங்கள்வழியாக மேற்கு தொடர்ச்சி மலை செல்கிறது.முதலில் மாதவ்காட்கில் தலைமையில் அமைந்த குழு கொடுத்த பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை, பின்னர் கஸ்துாரி ரங்கன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்தது. மாநில அரசுகளிடம் கருத்து கேட்டது.

கேரள அரசு உம்மண் உம்மண் தலைமையிலான குழுவை அமைத்து, பொதுமக்களின் குறிப்பாக ஏலவிவசாயிகளின் கருத்துக்களை கேட்டது. அதில் 123 கிராமங்களை சுற்றுப்புறச்சூழல்பிரதேசமாக கஸ்துாரி ரங்கன் அறிவித்திருந்தார். பெரும்பாலான கிராமங்களை நீக்கி உம்மண் கமிட்டி பரிந்துரை செய் தது. கேரள அரசு அதை ஏற்றுக் கொண்டு, மத்திய அரசிற்கு தெரிவித்தது. இதனால் கஸ்துாரி ரங்கன் கமிட்டி பரிந்துரைகள் அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

ஆனால் கடந்தாண்டு மற்றும் தற்போது பெய்து வரும் மழை, நிலச்சரிவுகளை காரணம் காட்டி கேரள அரசு, கஸ்துாரி ரங்கன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக செயல்படும் குவாரிகளை மூடுவது, புதிதாக லைசென்ஸ் வழங்க தடை விதிப்பது உள்ளிட்ட பல புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X