பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு வயது 65

Added : ஆக 19, 2019
Share
Advertisement
 பவானிசாகர் அணைக்கு வயது 65

ஈரோடு:பவானிசாகர் அணை, இன்று, 65வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு அடுத்த பெரிய அணை மற்றும் தென் மாநிலங்களில், மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணைக்கு உண்டு.அணையின் மொத்த உயரம், 105 அடி. 32.8 டி.எம்.சி., நீர் தேக்க முடியும். அணையின் முழு நீர்தேக்கப் பரப்பு, 30 சதுர மைல். கரையின் நீளம், 8.78 கி.மீ., ஆகும்.கீழ்பவானி பிரதான கால்வாயின் நீளம், 200 கி.மீ.,யாக உள்ளது. பிரதான கால்வாயில் இருந்து, 800 கி.மீ.,க்கு கிளை வாய்க்கால்களும், 1,900 கி.மீ.,க்கு, பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டு உள்ளன.

அணை நீரால், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், 2.47 லட்சம் ஏக்கர் நிலங்கள், பாசன வசதி பெறுகின்றன. இத்தனை சிறப்பு பெற்ற, பவானிசாகர் அணை, இன்று, 65ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.இங்கிலாந்து இயந்திரம்பவானி ஆறு, மாயாறு சேருமிடத்தில், 1948ல், பவானிசாகர் அணை கட்டும் பணி, 10.50 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியது. கட்டுமானப் பணியில், சுற்றுவட்டாரத்தில், 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஈடுபட்டனர்.

தொழில்நுட்ப பணிக்கு, இங்கிலாந்து நாட்டில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. கட்டுமான பணி நடந்தபோது, 1953ல், அப்போதைய பிரதமர் நேரு, சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.ஏழு ஆண்டுகளில், கட்டுமானப் பணி முடிந்து, 1955, ஆக., 19ல், அப்போதைய முதல்வர் காமராஜர், அணையை திறந்து வைத்தார். முற்றிலும் மண்ணால் கட்டப்பட்ட அணை, தற்போதும் உறுதித் தன்மையுடன் உள்ளது.16 மெகா வாட் உற்பத்திஅணையில், ஆற்று மதகுகள் ஒன்பது, கீழ்பவானி வாய்க்கால் மதகுகள் மூன்று, உபரி நீர் மதகுகள் ஒன்பது என, 21 மதகுகள் உள்ளன.

பவானி ஆற்று மதகுகளில் வெளியேற்றப்படும் நீரில், 8 மெகாவாட் மின்சாரம், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரில், 8 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.17 முறை நிரம்பியதுபவானிசாகர் அணை, முதன் முதலாக, 1957ல் முழு கொள்ளளவை எட்டியது. 64 ஆண்டுகளில், 17 முறை அணை நிரம்பியுள்ளது.

கடந்த ஆண்டு ஆக., 15ல் அணை நிரம்பி, 80 ஆயிரம் கன அடி நீர், பவானி ஆற்றில் வெளியேற்றப் பட்டது. நேற்று மாலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், 94.55 அடி; இருப்பு, 24.6 டி.எம்.சி.,யாக இருந்தது. இதனால், ஒன்பது கண் மதகு ஷட்டர் மேல் பகுதி வரை, தண்ணீர் தேங்கி, கடல் போல் காட்சியளிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X