அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஜெ.,யை விட அதிகம் சிந்திக்கும் இ.பி.எஸ்., :அமைச்சர் ராஜூ

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மதுரை:''மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஒன்பது முறை சிந்தித்தார் என்றால், தற்போதைய முதல்வர், இ.பி.எஸ்., 16 முறை சிந்தித்து தான், எந்தவொரு விஷயத்தையும் செய்வார்,'' என, கூட்டுறவுத் துறை அமைச்சர், ராஜு கூறினார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டி:பால் விலை உயர்வை எல்லோரும் ஏற்றுக்கொள்வர். இதனால், யாருக்கும் துன்பம் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஒன்பது முறை சிந்தித்தார் என்றால், தற்போதைய முதல்வர், இ.பி.எஸ்., 16 முறை சிந்தித்து தான், எந்தவொரு விஷயத்தையும் செய்வார்.எம்.ஜி.ஆர்., - ஜெ.,க்கு இணையாக, உலகில் யாரையும் ஒப்பிட முடியாது. இ.பி.எஸ்., 16 முறை சிந்திப்பதாக கூறுவது, ஒவ்வொரு திட்டத்தையும், மக்களை மனதில் வைத்து எடுப்பதற்காக கூறினேன். குடிமராமத்து பணி, யாரும் குறை கூற முடியாத அளவிற்கு நடக்கிறது.
பால் விலை உயர்வுக்காக, வழக்கம் போல, ஸ்டாலின், 'இந்த அரசு பதவி விலக வேண்டும்' என்பார். எதிர்க்கட்சி என்பதால், எதையும் எதிர்க்கத்தானே செய்வார்.தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதியின் நிர்வாகத்திறன், தற்போதைய தலைவர் ஸ்டாலினிடம் இல்லை. கருணாநிதியால் ஒன்றும் செய்ய முடியாத, அ.தி.மு.க., அரசை, ஸ்டாலினால் அசைக்க கூட முடியாது. வரும், 2021 சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., ஆட்சியே தொடரும். தேர்தல் வரும் போது, கூட்டணி குறித்து, தலைமை முடிவு செய்யும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
19-ஆக-201908:15:13 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பால் விலையை வருடா வருடம் 1 ரூபாய் ஏற்றலாம். எதிஷ்ரப்பு வராது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X