அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினியுடன் கூட்டணி? தமிழிசை பதில்

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (17)
Advertisement
 ரஜினியுடன் கூட்டணி? தமிழிசை பதில்

நெல்லிக்குப்பம்:''காஷ்மீர் பிரச்னையில், மத்திய அரசின் நிலையை ஆதரித்த ரஜினிக்கு நன்றி. அவருடன் கூட்டணி அமையுமா என்பதற்கு, காலம் தான் பதில் சொல்லும்,'' என, பா.ஜ., மாநிலத் தலைவர், தமிழிசை கூறினார்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:காமராஜர் தோல்விக்கு காரணமான தி.மு.க.,வினர், அவரை பற்றி பேசக் கூடாது. மூப்பனார், பிரதமர் ஆவதையும், அப்துல் கலாம், இரண்டாவது முறையாக, ஜனாதிபதி ஆவதையும் தடுத்தவர்கள், தி.மு.க.,வினர்; அவர்களை தமிழக மக்கள் புறக்கணிப்பர். தமிழக அரசு, மத்திய அரசுக்கு கைகட்டி நிற்பதாக, ஸ்டாலின் கூறுகிறார்.
காங்கிரஸ் ஆட்சியில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தி.மு.க., என்ன செய்து கொண்டிருந்தது. அத்தி வரதர், ஆன்மிக புரட்சி ஏற்படுத்தியுள்ளார். நாத்திகம் பேசுபவர்கள் கூட, அத்தி வரதரை காண வந்தனர். காஷ்மீர் பிரச்னையில், மத்திய அரசின் நிலையை ஆதரித்த ரஜினிக்கு நன்றி. அவருடன் கூட்டணி அமையுமா என்பதற்கு, காலம் தான் பதில் சொல்லும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
19-ஆக-201917:04:12 IST Report Abuse
சுந்தரம் காமராஜர் தோல்விக்கு திமுக காரணம் என்பது நியாயமாகப்படவில்லை. தேர்தல் என்று வரும்போது அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தின. அன்று காமராஜரை எதிர்த்து எந்த கட்சி வேட்பாளர் நின்றிருந்தாலும் வெல்வதற்கான சூழலே இருந்தது. அதற்கு முன் நடந்த சம்பவங்களும் காங்கிரஸ் மீது அதிருப்தியை வரவழைத்திருந்தது. போதாக்குறைக்கு எம்ஜி ஆர் போட்டோ மிகப்பெரிய மாயத்தை செய்தது. காமராஜரின் போதாத காலம் தன் வேட்புமனுவில் காமராஜ் என்றே பெயரை பதிவு செய்தார். (அடுத்து நடந்த நாகர்கோவில் தேர்தலில் தன் பெயரை காமராஜ் நாடார் என்று பதிவு செய்தார்) இப்படி பல காரணிகள். இதில் திமுகவை குறை சொல்வது நியாயமாகாது. (மன்னிக்கவும், நான் தீவிர திமுக எதிர்ப்பாளன் தான்) .தமிழிசை காமராஜர் பெயரை சொல்லி தனக்கு விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்பதே என் கருத்து.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-ஆக-201912:21:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கல்லை போட்டு சூப்பு வெச்ச கதை தான்.. முட்டையும் முட்டையும் சேர்ந்தா முட்டை தான் வரும். கோழி வராது.
Rate this:
Share this comment
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
19-ஆக-201911:39:19 IST Report Abuse
Rahim Gani தமிழிசை அக்கா உங்களுக்கு தெரியவில்லை என்றால் வாயை பொத்திக்கொண்டு இருக்கவும் ,இரண்டாவது முறையாக கலாம் ஏன் ஜனாதிபதி ஆகமுடியவில்லை என்ற உண்மை தெரியாமல் உளறவேண்டாம் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதாக இருந்தால் சரி இல்லை என்றால் போட்டியிடவில்லை என்று கலாம் கூறினார் ஆனால் உங்க சண்டாள பாஜக கலாமை தடுக்க வேண்டி பைரோன்சிங் செகாவத்தை போட்டியிட வைத்தது அதனால் கலாம் போட்டியிடவில்லை ,அந்த தேர்தலில் காங்கிரசின் பிரதிபா பாட்டில் 65.08% வாக்குகளையும் ,பைரோன்சிங் செகாவத் 34.02% வாக்குகளையும் பெற்றனர் ,கலாமிற்க்காக ஏன் உங்க கட்சி போட்டியிடாமல் விலகவில்லை?? பதில் சொல்வீர்களா??
Rate this:
Share this comment
Girija - Chennai,இந்தியா
19-ஆக-201912:21:36 IST Report Abuse
Girija@Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு, கலாம் திமுக தானாக முன்வந்து ஆதரவு அவருக்கு அளிக்கும் என்று நினைத்தார் ஆனால் கலைஞர் வாயை திறக்கவில்லை. உண்மையான தமிழ் பற்று இருந்தால் கலாம் பதவிக்காலம் முடியும்முன்பே அவர் தான் மீண்டும் ஜனாதிபதி ஆகவேண்டும் என்று திமுக சொல்லியிருக்க வேண்டும். சொல்லவில்லையே. போட்டி வரும் என்று நிலை வந்ததால் கலாம் தமக்கு மீண்டும் ஜனாதிபதி ஆக விருப்பமில்லை என்று விலகினார். அதனால் பி ஜெ பி பைராம் சிங்கை நிறுத்தியது பிரபாவதிக்கு எதிராக, பிரபாவதியை ஆதரித்து திமுக ஓட்டளித்து, அவரின் செயல்பாடுகள் மெச்ச தகுந்ததாக இருந்தது, நன்றிக்கடனாக கனிமொழியை அவர் தன்னுடன் அயல்நாடுகளுக்கு கூட்டி சென்றார். கலாமை ஜனாதிபதியாக்கியவர் யார் தெரியுமா? தமிழர் அல்ல ஆந்திராகாரர் சந்திரபாபு நாயுடு, வழிய சென்று வாஜிபாய்யிடம் பேசி செயல்படுத்தினார் நரசிம்மராவ் பிரதமமந்திரி ஆன பிறகு எம் பி தேர்தலுக்கு போட்டியிட்டார் ஆந்திராவில் இருந்து, அப்போது இதே சந்திரபாபு 'தெலுகு பிட்டா' என்று அவரை எதிர்த்து போட்டியிடாமல் அவர் வெற்றிபெற செய்தார். இப்படி சந்திரபாபு நாயுடுவுக்கு இருந்த நல்ல குணம் ஒன்று கூட திமுகவிற்கு கிடையாது. கலாம் மீண்டும் போட்டியிடுவாரா மாட்டாரா என்று சூழ்நிலையில் இவர்கள் கூட்டாளி சரத்பவார் கலாம் மனம் நோகும்படி டி வியில் பேசினார், பதவிக்காலம் முடிந்துவிட்டால் ஆபிஸை காலி செஞ்சுட்டு போகவேண்டியது தானே என்று, அடுத்த நொடியே கலாம் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டார். அதையாவது திமுக கண்டித்ததா இல்லையே? இப்பேற்பட்ட சிறப்புகளை கொண்டது உங்களை ஆதரிப்பது போல நடிக்கும் கட்சி. கலாம் அவர்கள் உங்கள் மதம் ஆனால் அவர் எங்கள் எல்லோருக்கும் குரு, பெரிய அண்ணன். அதனால் பொய் பதிவுகள் செய்யவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இதுதான் நடந்தது....
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-ஆக-201914:54:57 IST Report Abuse
ஆரூர் ரங்கலாமேன்றாலே கலகம் என்ற திமுக அவர் மீண்டும் பதவி பெறுவதைத் தடுக்கவில்லையென்பது சிரிப்பை வரவழைக்கிறது...
Rate this:
Share this comment
Girija - Chennai,இந்தியா
19-ஆக-201915:24:50 IST Report Abuse
Girijaகலாமிற்கு இரண்டாம் முறை வாய்ப்பு மறுக்கப்பட்டது அதன் விளைவை நாம் அனுபவித்தோம், ப்ரதிபாவின் ஆடம்பர பயணங்களின் செலவுகள், பதவி முடிந்து போகும் போது ஜனாதிபதி மாளிகையின் பொருட்களை எடுத்து சென்றது.... கலாம் அவர்கள் இருந்தபோது ஜனாதிபதி மாளிகையின் செலவு இந்திய வரலாற்றிலியே மிக குறைவு.. காமராஜருக்கு அடுத்தபடி அவர் வாழ்ந்தார், ஊரில் இருந்து வந்தியா, ஊற சுற்றி பார்த்தியா கிளம்பு என்று ரெண்டு நாட்களுக்குமேல் அனுமதிக்க மாட்டார். காமராஜரை போல் கலாமையும் அரசியல் செய்து காலி செய்தது திமுக ....
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
19-ஆக-201916:10:03 IST Report Abuse
Balajiஜவுதி ஜாமி அப்பிடியே அந்த மூப்பனார் காமராஜ் விஷயங்களைப்பத்தியும் DMK கு சொம்படிச்சீங்கன்னா நன்னா இருக்கும். நமக்கு வெவரம் பாத்தது. அதான் வெவரம் தெரிஞ்சிக்க-கலாம்-ஏ னு ஒரு ஆஜை....
Rate this:
Share this comment
Rahim Gani - Karaikudi,இந்தியா
19-ஆக-201917:05:12 IST Report Abuse
Rahim Ganiஇதுல ஏன் பிழைப்பு நடத்தும் நாட்டை இழுத்து கருத்து போடுறீங்க , திமுக வை மட்டும் குறை சொல்லும் நீங்கள் ஏன் பொது வேட்பாளராக கலாமை அறிவித்தால் பாஜக ஆதரவு தரும் என்று சொல்ல வில்லை என்பதை சொல்வீர்களா ? ஒருமித்து தேர்வு என்றால் போட்டியிடுகிறேன் என கலாம் அறிவித்து ஐந்து நாட்கள் வரை காத்திருந்தார் ஆனால் எந்த முடிவையும் யாரும் அறிவிக்க வில்லை ஆனால் இன்று அவருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள் ,துணை ஜனாதிபதிதான் அடுத்து ஜனாதிபதியாக வரவேண்டும் என்றும் அப்போதைய துணை ஜனாதிபதியான பைரோன் சிங்கை எல்லோரும் ஆதரிக்க வேண்டும் என்றும் பாஜக ஏன் ஆதரவு கேட்டது ? கலாமை அறிவித்தால் ஆதரவு தருவோம் என திரிணாமுல் மற்றும் தெலுங்கு தேசம் அறிவித்தும் ஏன் அவர்களை ஒன்றிணைத்து பாஜக கலாமை முன்மொழியவில்லை ? அன்றைக்கு ஜெயாவும் பாஜகவுடன் தோழமையோடு தான் இருந்தார் ஆக இவர்களை எல்லாம் பாஜக ஒருங்கிணைத்து கலாமிற்காக இறங்கி இருந்தால் திமுகவிற்கு வேறு வழி இல்லாமல் போயிருக்கும் , கருத்து எழுதும் நபரின் மதம் ஜாதியை வைத்து இதில் மதம் பற்றி இங்கு பேசுவது மடத்தனம் , கலாம் இரண்டாம் முறை பதவிக்கு வரவிடாமல் தடுத்ததில் பாஜக வின் பேராசையும் உண்டு என்பதை மட்டும் ஒப்புக்கொள்ள மறுப்பதை தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன் , பாலாஜி நீங்க மோடிக்கும் பாஜகவுக்கும் அடிக்கும் குருட்டுத்தனமான சொம்பை போல நான் அடிக்கவில்லை.........
Rate this:
Share this comment
Girija - Chennai,இந்தியா
19-ஆக-201919:10:40 IST Report Abuse
Girijaகருத்து பொதுவாக இருக்கவேண்டும், கண்ணை மறைக்கும் காரணம் வெறுப்பு பின்னால் இருக்க கூடாது , ஜெயாவிற்கு 2004 தேர்தலில் 0 சீட் வெற்றி, அப்புறம் எங்க சப்போர்ட் பண்ணுவது ? பிஜேபி மொத்தமே 138 கேள்வி திமுக ஏன் முன்னெடுக்கவில்லை என்பது தான் ? அவர் யார் கூட எப்படி வேண்டுமானுலும் இருக்கட்டும் அவர் அரசியல்வாதி கிடையாது பிறகு ஏன் திமுக முன்னெடுக்கவில்லை?கலாம் என்றால் கலகம் என்று கருணாநிதி சொன்னதும் உண்மை ....
Rate this:
Share this comment
samkey - tanjore,இந்தியா
19-ஆக-201920:36:13 IST Report Abuse
samkeyதிருடர்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமைக்கும் அகில இந்திய அடிமை திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமைக்கும் கலாம் அய்யா மீது உண்மையான மரியாதை கிடையாது. தங்களை காட்டிலும் கலாம் அய்யா புகழ் பெற்றுவிட்டார் என்ற காழ்ப்புணர்ச்சி அய்யா மீது உண்டு. கலாம் அய்யாவின் எளிமை திறமை நேர்மை அறிவாற்றல் தேசபற்று ஆகியவற்றை கண்டு கொண்ட வாஜபேயி அவர்கள் அய்யாவை முதல் குடிமகனாக்கி அழகு பார்த்தார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X