விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை, கட்டுமான பணிகளில் முறைகேடு உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து நேற்று எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கட்டுமான பணியில் செங்கற்களுக்கு பதிலாக சாம்பல் செங்கற்கள் பயன்படுத்துகிறது. இதனால் பூச்சு சரியாக நிற்காமல் தரமில்லாத கட்டடமாக மாறிவிடுகிறது. எனவே செங்கற்கள் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகலாதன், டாக்டர் அன்புவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE