நேர்முகத்தேர்வு

Added : ஆக 19, 2019 | |
Advertisement
n மதுரையில் சத்துணவு ஊழியர்கள் நியமனம்n காலிப்பணியிடங்களால் கூடுதல் பணிச்சுமைமதுரை : மதுரை மாவட்டத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இரண்டாண்டுகளை கடந்த நிலையில் சத்துணவு ஊழியர்கள் நியமனம் அரசியல் தலையீடுகளால் தள்ளிப் போகிறது. கூடுதல் பணிச்சுமையால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது.இம்மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில்

n மதுரையில் சத்துணவு ஊழியர்கள் நியமனம்n காலிப்பணியிடங்களால் கூடுதல் பணிச்சுமை
மதுரை : மதுரை மாவட்டத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இரண்டாண்டுகளை கடந்த நிலையில் சத்துணவு ஊழியர்கள் நியமனம் அரசியல் தலையீடுகளால் தள்ளிப் போகிறது. கூடுதல் பணிச்சுமையால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது.இம்மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்கள் 800 க்கும் அதிகமாக காலியாகவுள்ளன. 2017ல் இப்பணியிடங்களை நிரப்ப சமூக நலத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்முகத்தேர்வு 2017 மே மாதம் நடந்தது. ஆனால் ஆளுங்கட்சி நிர்வாகிகள் தனித்தனியாக தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்க கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு சிபாரிசு கடிதங்களை அனுப்பினர். இதனால் ஊழியர்களை தேர்வு செய்யும் பணி கிடப்பில் போடப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் மூன்று கலெக்டர்கள் மாற்றப்பட்ட பிறகும் கூட சத்துணவு ஊழியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த லோக்சபா தேர்தலின் போது கலெக்டராக நியமிக்கப்பட்ட நாகராஜன், அரசியல் சிபாரிசுகளை புறந்தள்ளி தகுதியான அங்கன்வாடி ஊழியர்களை தேர்வு செய்து நியமித்தார். சத்துணவு ஊழியர்களை நியமிக்க அவர் நடவடிக்கை எடுத்த நிலையில் சென்னைக்கு மாற்றப்பட்டார். சத்துணவு ஊழியர் பணியிடங்கள் காலியாகவுள்ளதால் அமைப்பாளர்கள், சமையலர்கள் கூடுதல் மையங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதுடன், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

கலெக்டர் ராஜசேகர் 2017ல் நடந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X