மதுரை:''தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதியின் நிர்வாகத்திறன் தற்போதைய தலைவர் ஸ்டாலினிடம் இல்லை. கருணாநிதியால் ஒன்றும் செய்ய முடியாத அ.தி.மு.க., அரசை ஸ்டாலினால் அசைக்க கூட முடியாது,'' என, மதுரையில் அமைச்சர் செல்லுார் ராஜு சாடினார்.
அவர் கூறியதாவது:பால் விலை உயர்வை எல்லோரும் ஏற்றுக்கொள்வர். இதனால் யாருக்கும் துன்பம் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒன்பது முறை சிந்தித்தார் என்றால் தற்போதைய முதல்வர் பழனிசாமி 16 முறை சிந்தித்து தான் எந்தவொரு விஷயத்தையும் செய்வார்.பால் விலை உயர்வுக்காக வழக்கம் போல ஸ்டாலின், ''இந்த அரசு பதவி விலக வேண்டும்,'' என்பார். எதிர்கட்சி என்பதால் எதையும் எதிர்க்கத்தானே செய்வார்.எம்.ஜி.ஆர்., ஜெ.,க்கு இணையாக உலகில் யாரையும் ஒப்பிட முடியாது.
பழனிசாமி 16 முறை சிந்திப்பதாக கூறுவது ஒவ்வொரு திட்டத்தையும் மக்களை மனதில் வைத்து எடுப்பதற்காக கூறினேன். குடிமராமத்து பணி யாரும் குறை கூற முடியாத அளவிற்கு நடக்கிறது.ஸ்டாலினால் அ.தி.மு.க., அரசை ஒன்றும் செய்ய இயலாது. 2021 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க., ஆட்சியே தொடரும். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். மற்ற மாநிலங்களை விட தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்றார். ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் உடன்இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE