திருப்பரங்குன்றம் : 'திருப்பரங்குன்றத்தை மையமாகக் கொண்டு தனி மண்டலம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்,' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பரங்குன்றம்நகராட்சி, திருநகர், ஹார்விபட்டி பேரூராட்சிகள், புதுக்குளம் 2பிட், தியாராஜர் காலனி மற்றும் அவனியாபுரம் நகராட்சி பகுதிகள் 2010ல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.
இதனால் பெயர் மாற்றம், வரி விதிப்பு, லைசென்ஸ் புதுப்பித்தல், குழாய் இணைப்பு போன்றவைகளுக்காக மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 4 அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகம். அவர்களுடன் திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி, அவனியாபுரம் பகுதியினரும் செல்வதால் கூட்டம் இரு மடங்காக உள்ளது. இதனால் தேவையில்லாத கால விரையமாவதுடன், பொருளாதார செலவும் ஏற்படுகிறது.மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு வரிகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால் நகராட்சி, பேரூராட்சிகளாக இருந்த போது கிடைத்த வசதிகள் தற்போது இல்லை. அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் நிலவுகிறது.
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. மலை மீது காசி விஸ்வநாதர், தர்க்க உள்ளன. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளும் இல்லை. எனவே திருப்பரங்குன்றத்தை தனி மண்டலமாக்கி சிறப்பு கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் விசாகன் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE