அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேற்றுமையிலும் ஒற்றுமை இந்தியாவின் பலம்

Added : ஆக 19, 2019
Advertisement

மதுரை : ''இந்தியாவில் 19, 500 மொழிகள் பேசப்படுகின்றன. பிரதான ஏழு மதங்களை மக்கள் பின்பற்றி வாழ்கின்றனர். இவ்வளவு வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது தான் இந்தியாவின் பலம்,'' என, மதுரைவாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை 15 ம் ஆண்டு விழாவில் போலீஸ் கூடுதல் எஸ்.பி., வனிதா பேசினார்.

விழாவிற்கு பேரவை தலைவர் முத்தம்பெருமாள் தலைமை வகித்தார். நிர்வாகி மாணிக்கரசி வரவேற்றார். துணை பொதுச் செயலர் ஜான் ஸ்டீபன் ஆண்டறிக்கை, பொருளாளர் செல்வம் நிதி நிலை அறிக்கை வாசித்தனர். விழா மலரை தியாகராஜர் கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தர்மராஜ் வெளியிட, பொறியாளர் கண்ணன் பெற்றார். கூடுதல் எஸ்.பி., வனிதா பேசியதாவது: இந்திய அளவில் பொருளாதார கருத்தமைப்பு பட்டியலில் 10 சமுதாயங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் குறைந்த மக்கள் தொகை மட்டும் கொண்ட காரைக்குடியை சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் இடம் பெற்றுள்ளனர். இதற்கு காரணம் கடின உழைப்பு, மதி நுட்பம் தான்.

அந்த பத்து இடங்களில் குமரிவாழ் மக்கள் இடம் பெற வேண்டும். கடின உழைப்பு தான் முன்னேற்றம் காண வைக்கும் என்றார். போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்குமார், மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி பேராசிரியை சரோஜா, புரவலர்கள் சொர்ணம், டாக்டர்கள் சாம் சி போஸ், ஏகநாதபிள்ளை, முனைவர் தாணுலிங்கம் பரிசுகள் வழங்கினர். ஏற்பாடுகளை பொதுச் செயலர் சந்திரசேகரன் செய்தார். நிர்வாகி மகாராஜன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X