அரசியல் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் திருமாவளவன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்: நலத்திட்ட உதவி வழங்கல்

Added : ஆக 19, 2019
Advertisement

திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த வி.சி.கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட வடக்கு வி.சி., சார்பில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை திண்டிவனம் காந்தியார் திடலில் நடந்தது.கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர செயலாளர்கள் எழிலரசன், இமயன் ஆகியோர் வரவேற்றனர்.மாவட்ட பொருளாளர் திலீபன், மாவட்ட செய்தி தொடர்பாளர் எழில்மாறன், திண்டிவனம் தொகுதி செயலாளர் பூபால்,மயிலம் தொகுதி செயலாளர் செல்வசீமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், காங்.,எம்.பி. விஷ்ணுபிரசாத், விழுப்புரம் மாவட்ட காங்., தலைவர் ரமேஷ், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ரங்கபூபதி, நகர கல்வி மேம்பாட்டுக்குழு தலைவர் பிரபா கல்விமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், தி.மு.க., இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா சிறப்புரையாற்றினார்.வி.சி., பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., பங்கேற்று ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:பாராளுமன்றத்தில் பா.ஜ.,விற்கு தி.மு.க., தலைமையிலான 38 எம்.பி.,க்கள் மட்டும் தான்.

உண்மையான எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறோம்.மற்ற மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சில சந்தர்ப்பங்களில் பா.ஜ.,வை எதிர்க்காமல் வெளியேறி விடுகின்றனர். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நேரத்தில், ஒரு நாள் முழுவதும் அதை எதிர்த்து முழக்கமிட்டு கொண்டிருந்தோம். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. இந்திய அரசியல மைப்பு சட்டத்திற்கே எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என்றார்.திண்டிவனம் நகர பொருளாளர்கள் காமராஜ், விஸ்பதாஸ் நன்றி கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X