அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

Added : ஆக 19, 2019
Advertisement

செஞ்சி : செஞ்சி வட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 14வது வட்ட மாநாடு வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

வட்டத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலர் ஜெயந்தி வரவேற்றார்.வட்ட துணைத் தலைவர் அண்ணா துரை தீர்மானம் வாசித்தார். மாவட்ட செயலர் மகாலிங்கம் துவக்கவுரை நிகழ்த்தினார். வட்ட செயலர் சரவணன் ஆண்டறிக்கையும், பொருளாளர் அபிராமி வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர். நிர்வாகிகள் பொன்முடி பூங்காவனம், தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில செயலர் பார்த்திபன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஏகாம்பரம், மேல்மலையனுார் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் வாழ்த்திப் பேசினர்.

துணைத் தலைவர்கள் கண்ணப்பன், செல்வகுமார், இணைச் செயலர் மனோகரன் தீர்மானங்களை வாசித்தனர். மாவட்ட செயலர் மகாலிங்கம், ஓய்வு பெற்ற வட்ட தலைவர் கண்ணப்பன், முனுசாமி ஆகியோரைப் பாராட்டி கவுரவித்தனர். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X