பொது செய்தி

இந்தியா

ராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (53)
Advertisement

புதுடில்லி: அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோவில் இருந்ததாக கூறி, கடந்த 1992ம் ஆண்டு, டிச.,6ல் கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.





முகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபர், வழித்தோன்றலான ஹாபிபுதின் டுசி என்பவர், ராமர் ஜென்ம பூமிக்கு தாங்கள் தான் வாரிசு, அந்த இடத்தை தங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்கிறார்.



ராமர் பிறந்த அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தினசரி நடைபெற்று வருகிறது. பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு, நவம்பர், 17க்கு முன் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபர், வழித்தோன்றலான ஹாபிபுதின் டுசி, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ள, தங்க செங்கல் ஒன்றை அன்பளிப்பாக வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.







வழங்க தயார்



மேலும், தான் பாபர் மசூதி கட்டிய, பாபர் மன்னரின்(1529) வழித்தோன்றல் என்று கூறும் இவ,ர் பாபர் மசூதி - ராமர் ஜென்ம பூமிக்கு தாங்கள் தான் வாரிசு என்கிறார். உச்சநீதி மன்றம் சர்ச்சைக்குரிய இடத்தை தங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும். நிலத்தை ஒப்படைக்கும் பட்சத்தில், ராமர் கோவில் கட்டுவதற்கு, முழு நிலத்தையும் தந்து விடுவதாக தெரிவித்தார்.

இவர் தன் கோரிக்கையை முன் வைத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவருடைய மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இந்துக்களின் நம்பிக்கையை மதிப்பதாக கூறும் இவர். பாபர் காலத்தில் ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்காக இந்துக்களிடம் மன்னிப்பும் கோருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
King of kindness - muscat,ஓமன்
21-ஆக-201909:10:23 IST Report Abuse
King of kindness சேற்றில் முளைத்த செந்தாமரை.நீ வாழ்க
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஆக-201905:26:19 IST Report Abuse
meenakshisundaram 'அப்படிப்போடு அரிவாளை 'இன்னு சொல்வாங்க ,எப்படியோ முஸ்லிம்கள் இவரின் சென்டிமென்டுக்கு மதிப்பளித்து வேண்டாத பிரச்சினையை தீர்க்க முயலவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
19-ஆக-201921:10:46 IST Report Abuse
bal முதலில் இவனை உதைக்கணும்...ஏன் இவன் வம்சாவளி பாபர் மசூதி கட்டினான்...அதுவும் கோவிலை இடித்து...
Rate this:
Share this comment
Krish Sami - Trivandrum,இந்தியா
20-ஆக-201916:55:21 IST Report Abuse
Krish SamiBal அவர் உங்களை மதிக்கிறார். நீங்கள் கேவலமாக அவரை அவமதிக்கின்றீர்கள். வெட்கம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X