அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரலாறு படிப்பவர்கள் அல்ல படைப்பவர்கள் மாணவர்கள்

Added : ஆக 19, 2019
Advertisement

திருமங்கலம் : ''மாணவர்கள் வரலாறு படிப்பவர்கள் அல்ல. வரலாறு படைப்பவர்கள்,'' என, திருமங்கலத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி முகாமில் அமைச்சர் உதயகுமார் பேசினார்.

அமைச்சர் பேசியதாவது: வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை எப்படி கையாள்கிறோம் என்பதை பொருத்துத் தான் சாதனை படைப்பவர்கள் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள். இங்குள்ள மாணவர்கள் வரலாறு படிப்பவர்கள் அல்ல. வரலாறு படைப்பவர்கள. உலகத்தில் பிறந்தவர்கள் அனைவரும் சாதனை படைக்க தான் பிறந்துள்ளனர். ஆக., 31 ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு முதலீட்டாளர்களை சந்திக்க முதல்வர் பழனிசாமியுடன் செல்கிறேன். தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீட்டாளர்களை ஈர்த்து வேலை வாய்ப்பை உருவாக்கித் தர முதல்வர் முயற்சி எடுக்கிறார்.

அவர் அமெரிக்காவிலுள்ள தமிழ் முதலீட்டாளர்களையும் சந்திக்க உள்ளார் என்றார்.கலெக்டர் ராஜசேகர், ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் தனலட்சுமி, டாக்டர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். புலவர் சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X