அரசியல் செய்தி

தமிழ்நாடு

மது விலக்கு கோரி பிரசார பயணம்

Added : ஆக 19, 2019
Advertisement

திருமங்கலம் : பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி லோக் தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியினர் கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரை பிரசார பயணம் மேற்கொண்டனர்.

திருமங்கலத்தில் அதன் மாநிலத் தலைவர் ராஜகோபால் கூறியதாவது: தர்மபுரி - கிருஷ்ணகிரி இடையே ராசிமணலில் அணை கட்ட அப்போதைய முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். பிறகு வந்த அரசுகள் அணை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. ராசிமணல் ஏரியாவில் அணை கட்டினால் 10 மாவட்டங்களின் நீர் ஆதாரம் பெருகும். 150 டி.எம்.சி., வரை தண்ணீர் சேமிக்கலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் 500 கடைகளை மூடினார். தற்போதுள்ள முதல்வர் பழனிசாமி அரசு நான்கு ஆண்டுகளில் எந்த கடையையும் மூடவில்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X