பொது செய்தி

தமிழ்நாடு

ஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (10)
Advertisement

சென்னை: அரசின் அறிவிப்பை தொடர்ந்து, ஆவின் பால் விலை உயர்வு, இன்று (ஆக.19) முதல் நடைமுறைக்கு வருகிறது. விரைவில், ஆவின் பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.


கால்நடைகளுக்கான தீவனங்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்ததால், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதையேற்று, பால் கொள்முதல் விலை, லிட்டருக்கு, நான்கு ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளது.அதே நேரம், விற்பனை விலை, லிட்டருக்கு, 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு, இன்று முதல், நடைமுறைக்கு வருகிறது.

பால் விலை உயர்வு காரணமாக, ஆவின் நிறுவன தயாரிப்புகளான, பால்கோவா, தயிர், லஸ்ஸி, ஐஸ்க்ரீம், பனீர் உள்ளிட்டவற்றின் விலையும் விரைவில் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, சேலத்தில் அளித்த பேட்டி: பெரும்பாலான பால் கூட்டுறவு சங்கங்கள், நஷ்டத்தில் இயங்குகின்றன. டீசல் விலை உயர்வால், பால் கொண்டு செல்லும் செலவு அதிகரித்துள்ளது. உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கால்நடை தீவனங்களை, ரேஷன் கடையில் விற்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஆக-201920:37:18 IST Report Abuse
ஆப்பு இவிங்க கிட்டேயிருந்து உருவி அவிங்களுக்கு குடுப்பாங்க. அப்புறம் அவிங்க கிட்டேயிருந்து உருவி இவிங்களுக்கு குடுப்பாங்க. நடுவுல ரெண்டு லேவா தேவியிலும் இவிங்க கொஞ்சம் உருவிப்பாங்க.
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
19-ஆக-201911:01:12 IST Report Abuse
DSM .S/o PLM விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உயர்த்தி தரப்பட வேண்டும்.. ஆனால் நுகர்வோருக்கு விலை குறைத்து தரப்படவேண்டும். இரண்டும் ஒரே சமயத்தில் சாத்தியம் அல்ல. இது அனைவருக்கும் தெரியும்.. இருந்தாலும் கூச்சலிடுவோம். இருபத்தோராம் நூற்றாண்டிலும் சலுகை, மானியம் இலவசம் இவற்றை பற்றி மட்டுமே கவலைப்படும் சமுதாயம் உலகிலேயே இந்தியாவில்மட்டுமே இருக்க முடியும்..
Rate this:
Share this comment
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
19-ஆக-201909:47:09 IST Report Abuse
Dr Kannan DISGUSTING TO SEE DMK and other opposition parties have adandoned the social justice and embraced varnashrama Poor farmers and low income milkman find it hard to survive with low price for the milk produced . The rich consumers are being subsidised by the poor milk producers . Poor citizens are not the major consumer of milk and mill product only upper e and rich consumers are benefitted by low milk price...DO DMK AND OTHER OPPOSITION PARTIES STAND FOR RICH OR POOR? DO DMK PROMOTE SOCIAL INJUSTICE AND VARNASHRADARMA? Do these political parties want THE POOR PRODUCERS BE BONDED LABOURERS TO RICH AND UPPER E MORONS? THIRUKURAL 1046: The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X