ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு: ராஜ்நாத் சிங்

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (24)
Advertisement

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு, நமது அண்டை நாடான பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், சர்வதேச அமைப்புகளுக்கும் இந்தப் பிரச்னையை எடுத்துச் சென்றது.






காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பாக்., மற்றும் சீனா எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து, மூக்குடைபட்டன. இதைத் தொடர்ந்து, எந்த விளைவுகளை சந்திக்கவும் தயார் நிலையில் இருப்பதாக பாக்., ராணுவம், திடீரென அறிவித்தது.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்பதே, இந்தியாவின் கொள்கை. ஆனால், எதிர்காலத்திலும் அது தொடருமா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது' என, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, ராஜ்நாத் சிங் பேசியதாவது:அண்டை நாடான பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டுமானால், முதலில் பயங்கரவாதத்துக்கு அளித்து வரும் ஆதரவை, அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.





பாக்., உடனான பேச்சுகள் இனி, ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக இருக்காது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தே இனி, எங்களுடைய பேச்சு இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து பேசி வருவதால், அதற்கு பதிலடி தரும் வகையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேசுவோம் என, ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-201902:49:43 IST Report Abuse
ஆப்பு சரி...அதுக்குப் போய் ஏன் ட்ரம்ப்பிடம் பேசுறீங்க?
Rate this:
Share this comment
Cancel
Bhasskar Kg - chennai,இந்தியா
19-ஆக-201920:46:56 IST Report Abuse
Bhasskar Kg Pakistan சிதறிவிட்டால் அங்கு உள்ள அனைத்து தீவிரவாதிகள் அனைவரும் பல நாடுகளுக்கு சிதறிவிடுவிரவர்கள் , ஆகையால் ஒரு ஸ்டேட் இருக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
19-ஆக-201920:13:26 IST Report Abuse
Sampath Kumar ஆக்கிரமிப்பு ஏன் ? எதனால் ஏற்பட்டது ? பதில் சொல்ல முடியுமா ? அப்பா இருந்த அரசின் கொள்கை ??? அப்படி ?? உமணயில் பிரிட்டிஷ் கரண் புத்தி சாலி அடிச்சுகிட்டு சாவுங்க என்று அவன் கழட்டி கிட்டான் அப்பா இருந்த நம்ம பெருசுங்க சுதந்திரம் கிடைச்ச போதும் ஏன்ற அளவில் தன அவர்கள் மன நிலை இருந்தது அதனால் இந்த விஷயம் பெரிதாக பாக்க பாடலை அடுத்து அடுத்து வாட்ச் அரசுகளும் இதை கவனிக்க தவறி விட்டனர் ஆகா மொத்தத்தில் மக்களின் வரிப்பணம் வீணாக்கிய பெருமை அரசியில் வியாதிகளுக்கு மட்டும் சொந்தம் இப்ப இவரு இதை பற்றி பஸுவது வரும் அரசியில் நோக்கத்துக்கே தும்பை விட்டு வாலை பிடித்த கதை தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X