பொது செய்தி

இந்தியா

வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார் எண் தேவை

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி: 'வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக, ஆதார் எண்களை கையாளும் அதிகாரம் வேண்டும்' என, தேர்தல் கமிஷன், மத்திய அரசிடம் வேண்டியுள்ளது.



latest tamil news



மத்திய சட்ட கமிஷனுக்கு, தேர்தல் கமிஷன், எழுதியுள்ள கடிதம்: வாக்காளர் பட்டியலில் சேர, புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களின் விபரங்களை சரி பார்க்கவும், வாக்காளர் பட்டியலில் இருந்து, போலி வாக்காளர்களை நீக்கவும், ஆதார் எண் விபரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், உச்ச நீதிமன்றம், 2015 ல் பிறப்பித்த உத்தரவு, அதற்கு தடையாக இருக்கிறது.


latest tamil news



எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகி உள்ளது.இவ்வாறு, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.கடந்த, 2015 ல், வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைக்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த தடையை விலக்க, பார்லிமென்டில் சட்டம் இயற்றுவது அவசியம். இதை வலியுறுத்தி, தேர்தல் கமிஷன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
19-ஆக-201914:28:06 IST Report Abuse
A.Gomathinayagam ஆதார் அட்டை ஒன்று போதுமே .அதை வைத்து ஒட்டு போடும் நிலை இருந்தால் வாக்காளர் பெயர் சேர்த்தால், நீக்கல் போன்ற ஊழல் நடக்காது
Rate this:
Ray - Chennai,இந்தியா
19-ஆக-201916:36:45 IST Report Abuse
Ray1. அசல் ஆதாரை ஒட்டு மையத்தில் காட்டுங்கள் 2. விரல்ரேகை பதிவு செய்யுங்கள் 3. ஓகே ஆனால் நபர் இந்த தெரு இன்னார் என்று ஒலிபெருக்கி அறிவிக்கும் 4 . விரல் மை தேவையில்லை 5. ஒட்டு பதிய அனுமதி - வேலை முடிந்தது...
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
19-ஆக-201914:07:54 IST Report Abuse
Rengaraj ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் அல்லது பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை இவை வைத்திருந்து அது கண்டுபிடிக்கப்பட்டால் அது குற்றவியல் சட்டத்தில் அடங்கும் என்றும் அவரும் அவர் குடும்பத்தாரும் ஜாமினில் வெளிவரமுடியாத பதினைந்து வருட கடுங்காவல் தண்டனை மூலம் தண்டிக்கப்படுவார்கள் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் ஒரு புது பிரிவு இயற்றப்பட வேண்டும். அப்படி ஒரு சட்டம் இயற்றினால் போதும் .
Rate this:
Ray - Chennai,இந்தியா
20-ஆக-201906:11:41 IST Report Abuse
Rayவாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க அந்த வலைதளத்தில் நமது அடையாள அட்டை என்னை உள்ளீடு செய்தால் நமது விவரங்கள் வருமென்றார்கள் சரியென்று எனது என்னை உள்ளீடு செய்தால் எதோ ஒரு பெண்மணியின் பெயர் விபரங்கள் வருகின்றதே என்ன செய்ய கம்ப்யுட்டர் சொன்னா தப்பாயிருக்காதுன்னு சொல்வாங்க தாலுக்கா ஆபீசில் சொன்னால் புதிய அட்டைக்கு 25 ரூபா கட்டி விண்ணப்பியுங்கள் என்கிறார்களே என் தவறில்லாத போது நான் ஏன் பணம் கட்ட வேண்டுமாம்? போங்கடான்னு வந்து விட்டேன்...
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
19-ஆக-201910:54:21 IST Report Abuse
Ray ஆதாரையே வாக்காளர் அடையாளமாக தெரு வார்டு கிராமம் சட்டசபை தொகுதி வாரியாக பட்டியலிட்டு விடலாம் ஒருவருக்கு ஆயிரத்தெட்டு அடையாள அட்டைகள் தேவையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X