பொது செய்தி

தமிழ்நாடு

மாநில அளவில் போராட்டம்: பீடி தொழிலாளர் முடிவு

Added : ஆக 19, 2019
Share
Advertisement
ஈரோடு: கூலி உயர்வு கேட்டு, மாநில அளவில் போராட்டம் நடத்த, பீடி தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள பீடி தொழிலாளர் ஊதியம், 2015 ஆக., மாதம் ஒப்பந்தமானது. கடந்த, மே மாதத்துடன் காலாவதியானது. மூன்று மாதமாகியும், பீடி தொழிலாளர் சங்கங்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம், பீடி கம்பெனிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல் தாமதம் செய்கின்றனர். இதனால், ஊதிய உயர்வு, அது

ஈரோடு: கூலி உயர்வு கேட்டு, மாநில அளவில் போராட்டம் நடத்த, பீடி தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பீடி தொழிலாளர் ஊதியம், 2015 ஆக., மாதம் ஒப்பந்தமானது. கடந்த, மே மாதத்துடன் காலாவதியானது. மூன்று மாதமாகியும், பீடி தொழிலாளர் சங்கங்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம், பீடி கம்பெனிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல் தாமதம் செய்கின்றனர். இதனால், ஊதிய உயர்வு, அது தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் துவங்க கோரி, ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து கொங்கு மண்டல ஐக்கிய பீடி தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) மாநில பொது செயலாளர் சின்னசாமி கூறியதாவது: ஒப்பந்தம் காலாவதியானதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஊதிய இழப்புக்கு ஆளாகியுள்ளனர். 1,000 பீடிகள் சுற்ற அடிப்படை சம்பளமாக, 300 ரூபாய் தரவேண்டும். வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட திட்டங்களில் சேர்க்க வேண்டும். பீடிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள, 28 சதவீத ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், பீடி தொழிலாளர்கள், 20ல் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X