பொது செய்தி

தமிழ்நாடு

சான்று பெற்ற விதைகள் வாங்க விவசாயிகளுக்கு யோசனை

Added : ஆக 19, 2019
Share
Advertisement
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து, கொடிவேரி பாசனங்களான தடப்பள்ளி - அரக்கன்கோட்டை கால்வாய், காளிங்கராயன் பாசன கால்வாய்க்கும் நஞ்சை பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விதைப்புக்கு தேவையான, விதை நெல், அரசு கூட்டுறவு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில், போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற அரசு கூட்டுறவு மற்றும் தனியார் விதை விற்பனை

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து, கொடிவேரி பாசனங்களான தடப்பள்ளி - அரக்கன்கோட்டை கால்வாய், காளிங்கராயன் பாசன கால்வாய்க்கும் நஞ்சை பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விதைப்புக்கு தேவையான, விதை நெல், அரசு கூட்டுறவு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில், போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற அரசு கூட்டுறவு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில், வெள்ளை அட்டை கொண்ட ஆதார நிலை விதைகள் மற்றும் நீல நிற அட்டை கொண்ட சான்று நிலை விதைகள் ஆகியவற்றை மட்டும் வாங்கி விதைத்து, பயனடையலாம். விதைகள் வாங்கும்போது, தவறாமல் ரசீதையும் கேட்டு பெற வேண்டும். அதில் விதை, ரகம், குவியல் எண், காலாவதி நாள், விலை, கடையின் விதை விற்பனை உரிமம் எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு வாங்கிய விதைகளை, அசோஸ்பைரில்லம் (நெல்) மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்து, விதைப்பதன் மூலம், நல்ல வளிப்பான நாற்றுகளை பெற முடியும். இத்தகவலை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X