பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : ஆக 19, 2019
Share
Advertisement
சேதமான 'டேங்க்'; வீணாகும் தண்ணீர்: தாளவாடி ஒன்றியம், மல்லன்குடி ஊராட்சி, சூசைபுரம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்துள்ளது. ஓராண்டாக இப்படித்தான் உள்ளது. இதுகுறித்து மக்கள் பலமுறை புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தண்ணீர் வீணாகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஊராட்சி

சேதமான 'டேங்க்'; வீணாகும் தண்ணீர்: தாளவாடி ஒன்றியம், மல்லன்குடி ஊராட்சி, சூசைபுரம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்துள்ளது. ஓராண்டாக இப்படித்தான் உள்ளது. இதுகுறித்து மக்கள் பலமுறை புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தண்ணீர் வீணாகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஊராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழிகாட்டியால் மக்கள் குழப்பம்: கோபி, பாரதி வீதியில், அரசு மருத்துவமனைக்கு வழிகாட்ட வசதியாக, வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், எழுத்துக்கள் எதுவுமின்றி, வழி தேடுவோரை குழப்பும் வகையில் உள்ளது. பல மாதங்களாக இப்படித்தான், எதற்கும் பிரயோஜனமின்றி காட்சி பொருளாக உள்ளது. கோபி நகராட்சி நிர்வாகம், வழிகாட்டி பலகையை புதுப்பிக்க, வாகன ஓட்டிகள், மக்கள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கழிவுநீரால் சுகாதார கேடு: ஈரோடு மாநகராட்சி, முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு சாலை செல்கிறது. இங்கு மின் மயானம் எதிரில், முறையான சாக்கடை கட்டமைப்பு இல்லாததால், கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம், கொசு உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், கழிவுநீரை ஓட வைக்க நடவடிக்கை எடுக்க, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தூர்வாரா சாக்கடை; தூக்குது வாடை: பவானி நகராட்சி, 26வது வார்டு, பூக்கடை வீதி, விவேகானந்தா பள்ளி அருகே, ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. மக்கள் பயன்படுத்தும் கழிவுநீர், சாக்கடையில் தேங்கி துர்நாற்றம் அடிக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மூக்கை பிடித்படி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாதக்கணக்கில் சுத்தம் செய்யாத சாக்கடையை, தூர்வார மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X