பொது செய்தி

தமிழ்நாடு

உயர்கிறது டீ, காபி விலை !

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (76)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் கடைகளில் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாயும் விற்பனை விலையை லிட்டருக்கு ஆறு ரூபாயும் உயர்த்தியுள்ளது.latest tamil newsஇந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையை விலையை அடுத்தடுத்து உயர்த்த உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என டீ கடைக்காரர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக பல இடங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளன. சென்னையில் நேற்று டீ கடைக்காரர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆனந்தன் கூறியதாவது: தற்போது பொதுமக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இதனால் பல டீ கடைகள் பெரிய அளவில் லாபம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த நேரத்தில் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது வியாபாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil newsஇதனால் டீ, காபி விலையையும் உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அதேநேரம் ஏற்கனவே விற்பனை மந்தமாகி விட்ட நிலையில் விலையை உயர்த்தினால் நிலைமை இன்னும் மோசமாகுமோ என்ற அச்சமும் எங்களுக்கு உள்ளது.


எனவே தற்போதைய சூழலில் டீ, காபி பழைய விலையில் விற்பது சமாளிக்க முடியாது. ஆகையால் டீ காபி விலையை உயர்த்தலாம் என்றும் முடிவு செய்துள்ளோம். உயர்த்தும் சூழல் வந்தால் டீ, காபி விலை இரண்டு ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
20-ஆக-201905:04:11 IST Report Abuse
Subramanian Sundararaman கட்டுப்பாட்டுடன் டீ, காப்பி சாப்பிடுவதை ஒரு வாரம் நிறுத்துங்கள் . நுகர்வோரும் நியாயமானவற்றுக்கு ஒன்று சேர்ந்தால்தான் நாம் சுரண்டப் படுவதை தடுக்க முடியும் . பெங்களூரில் எப்படி ரூ 7/ க்கு கிடைக்கிறது . Water can கூட GST அமல் ஆனபோது சில இடங்களில் ரூ 5 / ஏற்றிவிட்டார்கள் . இவர்கள் எல்லாம் வரி கட்டினார்களா ? சந்தர்ப்பவாதிகள் .
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
19-ஆக-201921:08:56 IST Report Abuse
Sundararaman Iyer 42 ரூபாய் பால் விலை இருந்தும் 7 ரூபாய்க்கு தரமான காபி பெங்களூரில் கிடைக்கிறது. பேராசை, கொள்ளை லாபம், நயவஞ்சகம், குள்ள நரித்தனத்தின் மொத்த உருவம்
Rate this:
Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா
20-ஆக-201903:51:41 IST Report Abuse
Jayaraman Pichumaniவர வர தமிழகம் வாழ்வதற்கு உகந்ததாக இல்லை என்னுமளவுக்கு மிகவும் மோசமாக மாறி வருகிறது....
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
19-ஆக-201920:56:05 IST Report Abuse
rajesh விலையை ஏத்துறது மட்டும் சரியா செய்ங்க.... என்னமோ சுத்த பால்ல தான் டீ, காபி விக்கிரமாதிரி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X