டில்லிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை| Delhi | Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (6)
Share

புதுடில்லி: தொடர் மழை காரணமாக டில்லி பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ட்டிரா, இமாச்சல், உத்தரகண்ட், குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, கேரளா, கர்நாடகா , தமிழகம் என மழை போதிய அளவு பெய்து வருகிறது. மதுரை மாவடத்தில் மட்டும் குறைந்த அளவே மழை பெய்துள்ளது.



latest tamil news



வட மாநில மழையால் கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் அபாய கட்டத்தை நதிகளில் வெள்ளம் தாண்டும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டில்லி, பஞ்சாப், அரியானா , உபி.,மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


latest tamil news




டில்லியில் இன்னும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X