பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் 13 நாளுக்குபின் பள்ளி திறப்பு

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (12)
Advertisement

ஜம்மு: காஷ்மீரில் 13 நாட்களுக்கு பின்னர் ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகள் இன்று (19 ம் தேதி ) திறக்கப்பட்டன.






கடந்த 5ம் தேதி காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதனையொட்டி காஷ்மீர் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இணையதளம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முக்கிய நகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தன.
தற்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. 144 தடை உத்தரவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தளர்வு செய்யப்பட்டுள்ளன.





இன்று அங்கு 190 க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் ஆர்வமாக பள்ளிக்கு திரும்புவதை காண முடிகிறது. மாநிலம் முழுவதும் பலத்த ரோந்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் லேண்ட்லைன் போன் இணைப்புகளும் கொஞ்சம், கொஞ்சமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 2ஜி இன்டர்நெட் சேவையும் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் எவ்வித அசம்பாவிதமும் இல்லை.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-201911:40:13 IST Report Abuse
ஆப்பு வெளிநாட்டு ஊடகங்கள் வேற மாதிரி செய்தி வெளியிடுகின்றன. புதியதலைமுறை டீ.வி கூட மாணவர்கள் பள்ளிக்கு செல்கவில்லைன்னு சொன்னாங்க. உண்மையில் என்ன நடக்குதுன்னு தெரியலை.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
20-ஆக-201901:32:35 IST Report Abuse
konanki நல்ல முடிவு. பள்ளிகளில் அசம்பாவிதம் தவிர்க்க இரண்டு அல்லது மூன்று அடுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மற்ற மாநில பிள்ளைகள் போன்று கல்வி ஆதாரமாக காஷ்மீர் மக்களின் குழந்தை களும் முன்னேற வேண்டும். காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மற்றும் உறவினர்கள் குடும்ப பிள்ளைகள் ஐரோப்பா மற்றும் வளை குடா நாட்டின் சிறந்த பள்ளிகளில் என்ற உண்மை தமிழ் நாட்டின் அரசியல் வியாபாரிகள் ஊடகங்களில் வராது.
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
19-ஆக-201918:08:01 IST Report Abuse
DSM .S/o PLM அய்யகோ .. சுதந்திரமாக திரிந்த பள்ளிச்சிறார்களை இப்படி படிக்கச்சொல்லி சிறைக்குள் அடைக்கலாமா.. கல் எறிய மட்டுமே கற்றுக்கொடுப்போம். அன்றி கல்வி கற்க அனுமதிக்க மாட்டோம்.. வைகோ விடம் சொல்லி, இம்ரானுக்கு தகவல் அனுப்புவோம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X