சென்னையில் கபடி திருவிழா

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019
Advertisement





பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.
சென்னை நேரு விளையாட்டரங்கம் விழாக்கால கோலகலம் பெற்றுள்ளது.இவ்வளவு கூட்டம் வரும் என்று விழா நடத்துபவர்களே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.





தமிழ் தலைவாஸ் அணி வீரர்களுக்கு பல இடங்களில் கட்-அவுட் வைத்துள்ளனர்.முதல் நாளான்று தமிழ் தலைவாஸ் அணி பெங்களூர் புல்ஸ் அணியுடன் மோதியது.தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரர் அஜய் தாக்கூர் எதிரணி களத்தில் கபடி பாடி போகும் பொழுதெல்லாம் கூட்டம் பெருங்குரலெடுத்து ஆரவாரம் செய்கிறது.அதே நேரத்தில் பெங்களூர் அணி வீரர்களையும் பாராட்டி தங்களது விளையாட்டு ரசனையை வெளிப்படுத்தினர்.





மைதானத்தினுள் இருந்தால் போதும் உற்சாகம் தன்னால் வரும் அப்படி ஒரு உற்சாகம் கரை புரண்டு ஒடியது.கிரிக்கெட்டை கொண்டாடும் தேசத்தில் நம்ம கபடியையும் இந்த அளவிற்கு வரவேற்பது சந்தோஷத்தை தருகிறது.இது தொடரவேண்டும்.





புரோ கபடி தொடரின் 7வது சீசன், கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. தமிழ் தலைவாஸ் ,பெங்களூரு புல்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை விளையாட வேண்டும். அதனபடி லீக் சுற்று (132 ஆட்டங்கள்) முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். 3 முதல் 6 வரையிலான இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றும் சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.





அதன்படி, புரோ கபடி 7வது சீசன் போட்டிகள் மொத்தம் 12 இடங்களில் நடைபெற உள்ளன. இதில், ஐதராபாத், மும்பை, பாட்னா, ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடந்துமுடிந்துள்ளன. அடுத்த கட்டமாக இப்போது சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் சென்னையில் வரும் 23ம் தேதிவரை நடைபெற உள்ளன.டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கின்றன.உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தவறவிட்டு விடாதீர்கள்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X