முத்தலாக்: மனைவியை எரித்த கணவன் கைது

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (69)
Advertisement

லக்னோ: முத்தலாக் கூறிய கணவன் மீது புகார் அளித்த மனைவியை குடும்பத்துடன் எரித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். உ.பி.,யில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உபி., யில் ஸ்ரவாஸ்தி மாவட்டம் காத்ரா கிராமத்தை சேர்ந்தவர் ரம்சான்கான் மகள் சையீதா 22. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நபீஷ் 26. என்பவரை திருமணம் செய்தார். தொடர்ந்து நபீஷ் மும்பைக்கு பணி நிமித்தமாக சென்றார். அங்கு இருந்தபடியே போனில் சையீதாவிடம் முத்தலாக் கூறி விவாகாரத்து செய்துள்ளார்.
இதனையடுத்து சையீதா போலீசாரிடம் புகார் மனு கொடுத்தார். போலீசார் வழக்கு பதியாமல் இரு குடும்பத்தினரிடமும் பேச்சு நடத்தி சுமூகமாக செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சையீதாவை கணவர் நபீஷ் அடித்து தாக்கி தரையில் விழ செய்தார். தொடர்ந்து தாத்தா, பாட்டி, அத்தை ஆகியோர் இணைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதனை நேரில் பார்த்ததாக சையீதாவின் மகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

போலீசார் பிணத்தை கைப்பற்றி கொலைக்கு காரணமான நபீஷ் மற்றும் 3 பேரை கைது செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
20-ஆக-201912:04:33 IST Report Abuse
Babu எந்த மதமும் மனிதனை பண்படுத்துவதில்லை. ஃபிராடு, பெண் பித்தன், கொலைகாரன், கொள்ளைக்காரன், எல்லா மதத்திலும் உண்டு. மதங்களின் குற்றமா? பிரிவினையாளர்களின் திரைமறைவு உபதேசங்களா?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan S - chennai,இந்தியா
20-ஆக-201909:26:22 IST Report Abuse
Srinivasan S where are the TN politicians, who opposed Triple Talaq.... what answer they give now.... please come out
Rate this:
Share this comment
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
20-ஆக-201906:38:45 IST Report Abuse
T.Senthilsigamani மிகவும் கொடுமையான செய்தி. போலீசார் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் நீதிமன்றம் துரிதமாக விசாரணை செய்து, அதிக பட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X