சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் பெண் மர்மசாவு:மனித உரிமை ஆணையம் விசாரணை

Added : ஆக 19, 2019
Advertisement
 நெல்லை, பெண், மர்மசாவு, மனிதஉரிமை, ஆணையம் விசாரணை

திருநெல்வேலி:போலீஸ் விசாரணையில் பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து மாநில மனிதஉரிமை ஆணையம் விசாரணையை துவக்கியுள்ளது.
நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் 56, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணியாற்றிவந்தார். அப்பகுதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போஸ்கோ சட்டத்தில் இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடினர். தலைமறைவான கிறிஸ்டோபர் அடிக்கடி பேசிய தொலைபேசி எண்களில் இருந்த கன்னியாகுமரி கருங்கல், பூமத்திவிளையை சேர்ந்த லீலாபாய் 52, என்பவரை வள்ளியூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் விசாரித்தனர். அப்போது தாக்கியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு லீலாபாய் இறந்ததாக பிரச்னை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். டி.ஐ.ஜி.,பிரவீன்குமார் அபிநபு விசாரித்தார். மனிதஉரிமை ஆணையம் விசாரணை:
லீலாபாய் மர்ம மரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. விசாரணை ஆணைய தலைவர் மீனாகுமாரி இதனை நேரடியாக விசாரிக்க உள்ளார். இதுதொடர்பாக அறிக்கை கேட்டு தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X