இதே நாளில் அன்று

Added : ஆக 19, 2019
Advertisement
 இதே நாளில் அன்று

ஆகஸ்ட் 20, 1944 முன்னாள் பிரதமர் ராஜிவ்:

மும்பையில், இந்திரா -- பெரோஸ் தம்பதியின் மகனாக, 1944 ஆக., 20ல் பிறந்தார். இங்கிலாந்து, கேம்பிரிட்ஜ் பல்கலையில் உள்ள, டிரினிட்டி கல்லுாரியில் பயின்றார். உடன் படித்த, சோனியா மைனோ என்ற பெண்ணை காதலித்து, 1968ல், திருமணம் செய்தார். விமானம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்று, 'இந்தியன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தில், பைலட்டாக பணி புரிந்தார். 1981ல், உ.பி., மாநிலம், அமேதி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 1984ல், அப்போதைய பிரதமரும், இவரது தாயாருமான, இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட பின், காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார்.அப்போது நடந்த, லோக்சபா தேர்தலில், 508 தொகுதிகளில், 401 தொகுதிகளை, காங்கிரஸ் கைப்பற்றியது. ராஜிவ், தன், 40வது வயதில், பிரதமராக பொறுப்பேற்றார்.கடந்த, 1991 மே 21ல், தேர்தல் பிரசாரத்திற்காக, தமிழகம், ஸ்ரீபெரும்புதுாருக்கு வந்தபோது, விடுதலை புலிகள் அமைப்பினரால், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு, உடல் சிதறி பலியானார்.முன்னாள் பிரதமர், ராஜிவ் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X