பொது செய்தி

தமிழ்நாடு

மின் நுகர்வோர் சேவை மையம் செயல்படுமா

Added : ஆக 19, 2019
Advertisement

மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க வசதியாக, பருவ மழை துவங்கும் முன், மின் நுகர்வோர் பொது சேவை மையம், செயல்பாட்டிற்கு வருமா என, பொதுமக்கள் கேள்வி எழுப்பிஉள்ளனர்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட, 19 நகரங்களில், வாரியம் சார்பில், மின் தடை நீக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் வசிப்போர், மின் தடை தொடர்பான புகார்களை, கணினி மையத்தில், '1912' என்ற தொலைபேசி எண்ணில், 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.அங்கு பெறப்படும் புகார், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, மின் வினியோகம் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.மத்திய அரசின், திருத்திய மின் திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை தலைமை அலுவலக வளாகத்தில், மின் நுகர்வோர் சேவை மையம் அமைக்கும் பணியை, மின் வாரியம், ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, 2012ல் துவக்கியது.
அங்கு, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய, 110 நகரங்களில் வசிப்போர், மின் தடை உள்ளிட்ட, மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.அவை, உடனுக்குடன், கணினியில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படும்.பெறப்படும் புகார், அவற்றின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை என, அனைத்து விபரங்களும், கணினியில் பதிவு செய்யப்படுவதால், 'தங்களுக்கு தெரியாது' என, அதிகாரிகள் யாரும் கூற முடியாது.இதுவரை, 150 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்ட நிலையில், இன்னும், சேவை மையம் செயல்பாட்டிற்கு வரவில்லை.விரைவில், மழை காலம் துவங்க உள்ளதால், மின் சாதனங்களில் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின் நுகர்வோர் சேவை மையம், மழை சீசன் துவங்குவதற்குள், செயல்பாட்டிற்கு வந்தால், மக்கள் பயன் அடைவர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X