காங்.,தலைவர்கள் மோடி புகழ்பாடுவதால் அதிர்ச்சி: கட்சியினருக்கு கடிவாளம் போட தலைமை முடிவு

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
மோடி , காங். தலைவர்கள்

பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும், வாயாரப் புகழும் காங்.,தலைவர்களின் எண்ணிக்கை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவது,அக்கட்சித்தலைமைக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது.
லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ், நிறைய சரிவுகளை சந்தித்து வருகிறது. பல வாரங்களாக, புதிய தலைவர் யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறிய அக்கட்சி, ஒருவழியாக சோனியாவை, இடைக்கால தலைவராக நியமித்தது.


நடவடிக்கை


இருந்தும், அக்கட்சி, ஒரு ஒழுங்கிற்கு வர முடியாமல் திண்டாடுகிறது. குறிப்பாக, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால், காங்கிரஸ் நிலைகுலைந்து போய் உள்ளது.இந்த விவகாரத்தில், கட்சி மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு எதிராக, முக்கிய தலைவர்கள் பலர் பேச ஆரம்பித்துள்ளது, காங்., தலைமையை, அதிர்ச்சிக்கு உள்ளாக்கிஉள்ளது.லோக்சபாவில், காஷ்மீர் குறித்த விவாதத்தில் பேசிய, கட்சியின் லோக்சபா குழு தலைவர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியில் துவங்கி, கட்சியின் பொதுச்செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியா, ஹரியானா முன்னாள் முதல்வர் புபீந்தர்சிங் ஹுடா என பலரும், சுருதி மாற்றி பேசி வருவது சர்ச்சையாகியுள்ளது.சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி பேசிய சில விஷயங்களை வரவேற்பதாக, இரு தினங்களுக்கு முன், முன்னாள் நிதியமைச்சர்,சிதம்பரம் கூறியது, தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.


வழிகாட்டி



இந்த வரிசையில், பாலிவுட் நடிகர், சத்ருகன் சின்ஹாவும் சேர்ந்துள்ளார். கடந்த, பா.ஜ., ஆட்சி முழுவதும், ஆளுங்கட்சிக்குள், அதிருப்தி எம்.பி.,யாகவே இருந்துவிட்டு,லோக்சபா தேர்தலில், தனக்கு மீண்டும் சீட் தரப்படவில்லை என்றவுடன், காங்கிரசுக்கு தாவினார்.பிரதமர் மோடியை, தீவிரமாக விமர்சித்த இவர், அவருடைய சுதந்திர தின உரையை, டுவிட்டர் பக்கத்தில் வரிக்கு வரி புகழ்ந்து தள்ளியுள்ளார்.


அதன் விபரம்:


பிரதமர் அவர்களே, குடி தண்ணீர் பிரச்னை குறித்தும், மக்கள் தொகை பெருக்க பிரச்னை குறித்தும், பிளாஸ்டிக் அபாயம் குறித்தும், நீங்கள் பேசியது அபாரம்.இப்பிரச்னைகளை களைய, மிகச்சிறந்த திட்டமிடலுடன் அமைந்திருந்தது தங்களின் பேச்சு. இந்நாட்டின் மிகச்சிறந்த நண்பன் மற்றும் வழிகாட்டி நீங்கள். அதனால்தான், சரியான நாளான, சுதந்திர தினத்தை தேர்ந்தெடுத்து, இவற்றை அறிவித்துள்ளீர்கள். நதிகளை இணைப்பது, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுதிட்டம்.தாங்கள் நேரம் தந்தால், இத்திட்டம் குறித்து, தங்களை நேரில் சந்தித்து பேச, விருப்பமாக உள்ளேன்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

மற்ற தலைவர்களைப்போல, பிரதமரை புகழ்ந்ததோடு நின்றுவிடாமல், ஒருபடி மேலேபோய், அவரை நேரில் சந்தித்து பேச, சத்ருகன் சின்ஹா விருப்பம் தெரிவித்துள்ளதால், இது போன்ற புகழ் பாடல்கள் மேலும் தொடராமல் இருக்க, விரைவில் நடவடிக்கைககள் எடுக்கப்படுமென, காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
22-ஆக-201908:45:13 IST Report Abuse
madhavan rajan எதிராளியிடம் கோபித்துக்கொண்டு உங்களிடம் வந்தவனுக்கு பதவி கொடுக்க ஆசைப்பட்ட நீங்கள் அவர் உங்களுக்கே விசுவாசமாக இருக்கவேண்டும் என்று நினைப்பது நீங்கள் எவ்வளவு பேராசைக்காரர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
22-ஆக-201908:40:54 IST Report Abuse
madhavan rajan காங்கிரசுக்கு மக்கள் தேர்தலில் லாடம் கட்டிட்டாங்க. பல கோர்ட்டுகள் வேறு காங்கிரஸ் தலைவர்களுக்கு கடிவாளம் போட்டு ஜாமீன் வழங்கியிருக்கிறது. நல்லா கடிவாளம் போடுறாங்க போங்க.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
21-ஆக-201909:44:05 IST Report Abuse
oce மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.நல்லவர் எங்கிருந்தாலும் வாழ்த்துவது மனிதாபிமான செயல். அதை பார்த்து பொறாமை படுவது அறிவீனம். காங்கிரசிலும் பாராட்ட்பட வேண்டிய சில யோக்கியர்கள் இருக்கிறார்கள.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X