அனைத்து ஏழைகளுக்கும் வீட்டுமனை: இ.பி.எஸ்.,அறிவிப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைத்து ஏழைகளுக்கும் வீட்டுமனை: இ.பி.எஸ்.,அறிவிப்பு

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (7)
அனைத்து ஏழை, வீட்டுமனை

சேலம்: ''வீட்டுமனை இல்லாத, அனைத்து ஏழை மக்களுக்கும், வீட்டுமனை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்.
சேலம் மாவட்டம், நங்கவள்ளியில், முதல்வரின் சிறப்பு குறை தீர் திட்டத்தை நேற்று துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி, இ.பி.எஸ்., பேசியதாவது:நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்கள்தோறும் அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று, மனுக்களை பெற்று, மக்களின் குறைகளுக்கு தீர்வு காண, முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.அனைத்து நகர்ப்புற வார்டுகளிலும், கிராமங்களிலும், கலெக்டரின் உத்தரவுப்படி, குறிப்பிட்ட நாளில் அலுவலர் குழு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள், மனுக்களை பெறுவர்.இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு, ஒரு வாரத்திற்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீது, ஒரு மாதத்திற்குள் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மனுக்களின் மீதான நடவடிக்கைக்கு பின், செப்டம்பர் மாதம், அமைச்சர்கள் தலைமையில், தாலுகா அளவிலான விழா நடத்தப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும், 234 தொகுதிகளிலும், முதல்வரின் சிறப்பு குறை தீர் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.வீட்டுமனை இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும், வீட்டு மனை வழங்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்கும். முதியோர் உதவித்தொகை திட்டத்தில், மேலும், 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.


விவசாயியாக மாறிய முதல்வர்


சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதிக்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி ஊராட்சி, புது ஏரியில், குடிமராமத்து பணியை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.தானும் ஒரு விவசாயி என்பதை வெளிப்படுத்த, பச்சை கரை போட்ட துண்டால் தலைப்பாகை அணிந்து, கடப்பாரையால் மண்ணை தோண்டி, மண்வெட்டியால் வெட்டி எடுத்தார். பின், அதை இரும்பு சட்டியில் நிரப்பி, பெண்களுக்கு தலைச்சுமையாக வைத்து அனுப்பினார்.


ஆத்துார் புதிய மாவட்டம்: இன்று அறிவிப்பு?


சேலம் மாவட்டத்தில், 2011, கணக்கெடுப்பின்படி, 34 லட்சத்து, 82 ஆயிரத்து, 56 பேர் வசிக்கின்றனர். இதில், நான்கு வருவாய் கோட்டங்கள், 13 தாலுகாக்கள், 20 ஊராட்சி ஒன்றியங்கள், நான்கு நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், 385 ஊராட்சிகள் உள்ளன.இதில், 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சேலத்திற்கு அடுத்த பெரிய நகரமாக, ஆத்துார் விளங்குகிறது.ஆத்துாரை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆத்துாரில் இன்று நடக்கும் விழாவில், முதல்வர், இ.பி.எஸ்., புதிய மாவட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்புஎழுந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X