அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.100 க்கு 'ஆர்.டி.ஐ.,அரசாணை தொகுப்பு கிடைக்கும்: ஜெயக்குமார்

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
ரூ.100 க்கு 'ஆர்.டி.ஐ., அரசாணை தொகுப்பு


சென்னை: ''தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பாக, அரசின் நிர்வாக சீர்திருத்த துறை பிறப்பித்த அரசாணைகளின் தொகுப்பு, 100 ரூபாய்க்கு விற்கப்படும்,'' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.

அரசின் பொது தகவல் அலுவலர்கள், மேல் முறையீட்டு அலுவலர்களுக்கு, 'தகவல் பெறும் உரிமை சட்டம் - 2005' தொடர்பான கருத்தரங்கம், சென்னையில் உள்ள, அண்ணா மேலாண்மை நிலையத்தில், நேற்று நடந்தது.
கருத்தரங்கை துவக்கி வைத்து, மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர், ஜெயகுமார் பேசியதாவது:தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பாக, நிர்வாக சீர்திருத்த துறை, இதுவரை பிறப்பித்த அரசாணைகள் தொகுப்பு, 100 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படும். இது, தனி நபர்கள் மற்றும் தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்களுக்கும், பயனுள்ளதாக இருக்கும்.அண்ணா மேலாண்மை நிலையத்தால் நடத்தப்படும் பயிற்சிகளால், அரசுத் துறையினருக்கு, தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்த அச்சம் நீங்கி, மனுக்களுக்கு, எந்த வகையில் தகவல் அளிக்க வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.இதில், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சி துறை தலைவர், வெ.இறையன்பு, முன்னாள் மாநில தகவல் ஆணையர், ஜி. ராமகிருஷ்ணன், முன்னாள் தலைமை தகவல் ஆணையர், கே.எஸ்.ஸ்ரீபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


'வேறு வழியின்றி பால் விலை உயர்வு'


''வேறு வழியின்றி, பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது,'' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:காஞ்சிபுரம், அத்தி வரதர் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில், 7 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. தொடர்ந்து, காணிக்கை எண்ணும் பணி நடக்கிறது. வசூல் தொகையை, மாவட்ட நிர்வாகம் முறையாக அறிவிக்கும். ஏற்கனவே எடுத்த முடிவின்படி, சசிகலா, தினகரன் குடும்பத்தை சேர்ந்தோரைத் தவிர, வேறு யார் வந்தாலும், கட்சியில் சேர்த்துக் கொள்வதாக கூறி உள்ளோம்.பால் விலை உயர்வு குறித்து, சட்டசபையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. பால் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர், இரு தண்டவாளங்கள் மாதிரி. உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுத்ததால், வேறு வழியின்றி, பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விவசாயி - Tiruppur,இந்தியா
20-ஆக-201908:25:50 IST Report Abuse
விவசாயி அத்திவரதரை போல அறிவாலயத்தில் ஒரு சிலை உள்ளதாமே?........அந்த சிலையை ஊழல்செய்தவர்கள் மட்டுமே பார்க்க முடியுமாம்.......
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
20-ஆக-201907:44:44 IST Report Abuse
ஆரூர் ரங் அத்திவரதர் உண்டியல் வசூலைவிட பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் வசதிக்காக அரசு செய்த செலவு பலமடங்கு .அந்தப்புண்ணியம் அரசைக் காப்பாற்றட்டும்
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
20-ஆக-201907:26:29 IST Report Abuse
VENKATASUBRAMANIAN This amount should be spent on the development work on temples not for other purpose.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X