பொது செய்தி

இந்தியா

நேரடி வரி முறை சீர்திருத்தம் புதிய நெறிமுறைகள் தயார்

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (8)
Advertisement
நேரடி வரி முறை சீர்திருத்தம் புதிய நெறிமுறைகள் தயார்

புதுடில்லி: வருமான வரியில், சீர்திருத்தங்களை ஏற்படுத்த வகை செய்யும், நேரடி வரி நெறிமுறைகள் குறித்த அறிக்கை, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.


நீட்டிப்பு


அந்த அறிக்கை விரைவில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.நேரடி வரிமுறையில், சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான நெறிமுறைகளை வகுக்க, மத்திய நிதித்துறை, ஒரு சிறப்பு குழுவை, கடந்த நவம்பர் மாதம் அமைத்தது. அந்த குழுவுக்கு, மத்திய, நேரடி வரிகள் மத்திய வாரியத்தின் சட்டமியற்றும் பிரிவின் உறுப்பினர், அகிலேஷ் ரஞ்சன் தலைமை வகித்தார்.அதில், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட், கிரிஷ் அஹுஜா; 'எர்னஸ்ட் அண்ட் யங்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், ராஜிவ் மெமானி; வழக்கறிஞர், முகேஷ் படேல்; வரித்துறை வல்லுனர்கள், மன்சி கேடியா மற்றும் ஜி.சி.ஸ்ரீவத்சவா உறுப்பினர்களாக இருந்தனர்.

இந்த குழு, மே மாதமே அறிக்கை அளிக்க, கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின், மூன்று மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது.கடந்த, 16 ல், அறிக்கை அளிக்கப்படும் என, எதிர்பார்த்த நிலையில், நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


முக்கிய அம்சங்கள்



இந்த சிறப்பு குழுவினர், டில்லியில், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், நேரடி வரி நெறிமுறை அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வெளியிடப்படவில்லை. மாறாக, 'விரைவில், நிதித்துறை இணையதளத்தில் வெளியிடப்படும்; அதை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்; கருத்துகள் தெரிவிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan paramasivam - Abhunakala,கத்தார்
20-ஆக-201922:06:32 IST Report Abuse
Natarajan paramasivam எப்போதும் வரியை பத்தியே யோசிச்சேன்னா எங்களுக்கு வேலை எப்போ தருவா?
Rate this:
Share this comment
Cancel
Tamil Selvan - tamilnadeu,இந்தியா
20-ஆக-201919:44:25 IST Report Abuse
Tamil Selvan நாட்டின் பொருளாதரம் மிகவும் மோசமாக உள்ளது இதை சரி செய்வதற்க்கு நிபுணத்துமிகுந்த நபர்கள் யாரும் இல்லை மேலும் பொருளாதரம் சரிவடையும் என்பதில் சந்தோகம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஆக-201917:03:47 IST Report Abuse
Endrum Indian 2014 ல் தேர்தலுக்கு முன்னால் சொன்னது என்ன பிஜேபி ஆட்சிக்கு வந்தால் வருமான வரி நீக்கப்படும், அதை முதலில் செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X