ஜம்மு - காஷ்மீர் அமைதிக்கான திட்டங்கள் தயார்:  அஜித் தோவலுடன் அமித் ஷா ஆலோசனை

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
 ஜம்மு - காஷ்மீர், அமைதி, திட்டங்கள் தயார்,

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் முழு அமைதி திரும்புவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் உள்ளிட்டோருடன், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, அமைதியை ஏற்படுத்தும் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜம்மு - காஷ்மீரில், 144 தடை உத்தரவு மற்றும் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது படிப்படியாக, இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், இம்மாதம், 5ம் தேதியில் இருந்து, 10 நாட்களாக, ஜம்மு - காஷ்மீரில் முகாமிட்டு, நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.டில்லி திரும்பிய அவர், தொடர்ந்து, அங்குள்ள நிலைமையை கண்காணித்து வந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான, அமித் ஷா தலைமையில் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில், அஜித் தோவல், உள்துறை செயலர் ராஜிவ் கவுபா, உளவு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜம்மு - காஷ்மீரில், அமைதி திரும்புவதற்கு எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்த திட்டங்கள், இந்தக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. காஷ்மீரில், 15 நாட்களுக்குப் பிறகு, அரசு நடத்தும், 190 துவக்கப் பள்ளிகள் உள்ளிட்டவை நேற்று திறக்கப்பட்டன. ஆசிரியர்கள் பெருமளவில் பணிக்கு வந்திருந்தனர். ஆனால், குறைந்த எண்ணிக்கையிலேயே, மாணவர்கள் வந்திருந் தனர். தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை.அடுத்த சில நாட்களில், நிலைமை மேலும் சீரடைந்து, பள்ளிகள் முழுமையாக இயங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


கோரிக்கை'வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்க வேண்டும்' என, ஜம்மு - காஷ்மீர் வியாபாரிகள் சங்கங்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துஉள்ளது.'கடந்த சில நாட்களாக, அனைத்து தொலைத் தொடர்பு வசதிகளும் முடக்கி வைக்கப்பட்டுஇருந்தன. சிறப்பு நிகழ்வாக, இந்த அவகாசத்தை அளிக்க வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனுக்கு, கூட்டமைப்பு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


கண்காணிப்பில் கட்சியினர்


ஜம்மு - காஷ்மீரின் பல இடங்களில், கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், சில இடங்களில், வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. மக்களை துாண்டி விடும் வகையில், பொய் தகவல்களை பரப்பி வருவதாக, முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, சில நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக, பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

'ரஜோரி மாவட்டம், சுரன்கோட் பகுதியில் வன்முறை வெடித்துள்ளதாக, புரளி பரவியது. இது தொடர்பாக விசாரித்தபோது, பிரிவினைவாதத் தலைவர்களுடன் தொடர்பு உள்ள அரசியல் கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகளே, இந்த பொய் செய்தியை பரப்பியது தெரிய வந்துள்ளது. அவர்களை கண்காணிக்கிறோம். 'தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பாதுகாப்புப் படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


துணைத் துாதரிடம் புகார்இந்திய ராணுவம், எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக, பாகிஸ்தானுக்கான இந்திய துணைத் துாதர் கவுரவ் அலுவாலியாவை நேரில் அழைத்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை புகார் கூறியுள்ளது.இது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், முகமது பைசல் கூறியதாவது:போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி, இந்திய ராணுவம், எல்லைப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று நடந்த அத்துமீறலில், இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; ஒரு சிறுவன் காயமடைந்துஉள்ளான். இது, சர்வதேச விதிகளுக்கும், மனித உரிமைக்கும் எதிரான நடவடிக்கை. எல்லையில் தாக்குதல் நடத்துவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என, எச்சரித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த, ஒரு வாரத்தில், நான்காவது முறையாக, நம் துணைத் துாதரை நேரில் அழைத்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை, புகார் கூறியுள்ளது.


தத்தளித்தவர்கள் மீட்புதாவி நதியில், கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று திடீரென அதில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில் சிக்கிய நான்கு மீனவர்கள், ஒரு கான்கிரீட் பிளாட்பாரத்தில் தஞ்சம் அடைந்தனர். சுற்றிலும் வெள்ளம் ஓடியதால், அங்கு நீண்ட நேரம் சிக்கி தவித்தனர்.இதையடுத்து, விமானப் படை ஹெலிகாப்டர், அவர்களை மீட்க அனுப்பப்பட்டது. நான்கு மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். உயிரை துச்சமென மதித்து, விமானப் படை வீரர்கள், அவர்களை மீட்டது தொடர்பான, 'வீடியோ', சமூக வலைதளங்களில் வெளியானது. சிறப்பாக செயல்பட்ட, விமானப் படை வீரர்களுக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
20-ஆக-201921:25:17 IST Report Abuse
Rajan காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தியதில் நமது விஜய குமாருக்கும் பெரும் பங்கு உண்டு, நமது இளம் தளிரை கல்லெறிந்து கொன்ற கூட்டத்திற்கு கடிவாளம் போதும் குழுவில் முக்கியமானவர். இங்கயும் ஒரு கேடு கெட்ட நாட்டை காட்டி கொடுக்க தயங்காத வெட்கம் கெட்ட கூட்டம் சூசை தலைமையில், தமிழ் அடிமைகளே வெட்கம்
Rate this:
Cancel
Tamil Selvan - tamilnadeu,இந்தியா
20-ஆக-201919:47:21 IST Report Abuse
Tamil Selvan எல்லாம் அழிவு திட்டங்கள் தான்
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
20-ஆக-201917:01:34 IST Report Abuse
PANDA PANDI 144 வாழ்நாள்முழுவதும். அமேதிக்கான திட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X