அரசியல் செய்தி

தமிழ்நாடு

காஷ்மீர் விவகாரம்: 22ல், டில்லியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (119)
Advertisement
காஷ்மீர் விவகாரம்: 22-ல் ஆர்ப்பாட்டம்

சென்னை: ''ஜம்மு - காஷ்மீரில், வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள, அரசியல் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி, டில்லியில், 22ம் தேதி, கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து, சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், சமீபத்தில் நடந்தது.

அதில் பங்கேற்ற, சில கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வலியுறுத்தின. ஆனால், தி.மு.க., தரப்பில், போராட்டம் தேவையில்லை என, கூறப்பட்டது.முடிவில், தி.மு.க., கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்.பி,,க்கள், ஸ்டாலின் தலைமையில், டில்லியில், பிரதமர், மோடியை சந்தித்து, ஜம்மு - காஷ்மீரில், வீட்டுச் சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்க கோரி, மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மோடியை சந்திக்க, அனுமதி கிடைக்கவில்லை.

இதையடுத்து, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், நேற்று வெளியிட்ட அறிக்கை:ஜம்மு - காஷ்மீர் தலைவர்களான, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர், ஜனநாயகத்தின் குரலாக நின்று, மக்களுக்கு அரும் பணியாற்றியவர்கள்.மத்திய அரசு, அவர்களை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்துள்ளது; அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை, பா.ஜ., அரசு, சர்வதேச பிரச்னையாக்கி விட்டது; அக்கட்சிக்கு, ஜனநாயகத்தில் நம்பிக்கைஇல்லை.ஜம்மு - காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள, அனைத்து தலைவர்களையும், மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, 22ம் தேதி, டில்லி ஜந்தர்மந்தரில், தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.டில்லியில் ஆர்ப்பாட்டம் நடப்பதால், சென்னை, அறிவாலயத்தில், நாளை நடக்க இருந்த, தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், 24ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (119)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
22-ஆக-201911:49:26 IST Report Abuse
oce காஷ்மீர் தலைவர்களான, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர், ஜனநாயகத்தின் குரலாக நின்று, மக்களுக்கு அரும் பணியாற்றியவர்கள் பாகிஸ்தானால் ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் இறந்து போனார்களே அவர்களுக்கு எல்லாம் மேற்படி இருவரும் கண்ணீர் அஞ்சலி என்றாவது செலுத்தி இருப்பார்களா.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
22-ஆக-201911:46:41 IST Report Abuse
oce யர்ர் பிரிவினை வாதிகள் என்பதை இந்த உலகமே அறியும். ரியாத் ரபி.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
22-ஆக-201911:43:09 IST Report Abuse
oce காங்கிரஸ் கொள்கை இந்திய தேசிய உணர்வை பிரதிபலிக்கும் கொள்கை அல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X