கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை : நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோர்ட் யோசனை

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற யோசனை


மதுரை:மதுரை உட்பட 13 மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, தீர்வு காண எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வரைவு செயல் திட்டம் தாக்கல் செய்ய தலைமை செயலருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
'வைகை ஆறு உட்பட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒருங்கிணைந்த செயல் திட்டம் வகுக்க வேண்டும்.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, நீர்நிலைகளை முறையாக பராமரித்து தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க மதுரை கலெக்டர், பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என 2018 ல் மனு தாக்கலானது. இதுபோல் பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.
2018 அக்.,ல் நீதிபதிகள் அமர்வு உத்தரவு: மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிலை உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.
மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது.

பக்கத்து மாநிலங்களில் தண்ணீருக்காக கையேந்தும் நிலை உள்ளது. முதற்கட்டமாக மதுரை வண்டியூர், மாடக்குளம், செல்லுார், திருப்பரங்குன்றம் உட்பட சில கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்நிலைகளை அளவீடு செய்து, எல்லைகளை வரையறுக்க வேண்டும். நீர்நிலைகள் தொடர்பான நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது. மின் இணைப்பு வழங்கக்கூடாது, என்றனர்.

பின் விசாரணையின் போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்தனர்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவுஇந்நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் எங்கெங்கு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன, மீண்டும் ஏற்படாமல் தடுக்க வழிமுறைகள், நீர்நிலைகளை பழைய நிலைக்கு கொண்டுவந்து தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமை செயலர் தலைமையில் பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரகவளர்ச்சித்துறை செயலாளர்கள், கலெக்டர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரைவு செயல் திட்டத்தை அக்.,3ல் தலைமை செயலர் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஆக.,28க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.
'நீர்நிலைகளை விதிகள்படி துார்வார வேண்டும். பணி முடிந்தபின் ரோலர் மூலம் சமப்படுத்தி, நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துார்வாரப்படும் மண்ணை நீர்நிலைகளின் கரைகளில் குவித்து, உயரத்தை அதிகரித்து, பலப்படுத்த வேண்டும். இதன்படி துார்வாரும் பணியை மேற்கொள்வதில்லை. விதிகள்படி துார்வாரும் பணியை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்,' என மற்றொரு மனு தாக்கலானது.

நீதிபதிகள், 'நீர்நிலைகளை ஆழப்படுத்தி, பலப்படுத்த எத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் செப்.,16 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
20-ஆக-201922:35:41 IST Report Abuse
bal அடையாற்றில் வெள்ளம் வந்தபோதும் இதையே சொன்னேர்கள்...மியோட ஆஸ்பத்திரியை தகர்த்தீர்களா இல்லை ஆக்கிரமிப்புகளை அகற்றினீர்களா...எல்லாம் ஊழல்....மனித நேரம்தான் வீண்
Rate this:
Share this comment
Cancel
20-ஆக-201921:59:25 IST Report Abuse
கதை சொல்லி ஹாஹாஹாஹா... மதுரையில் உலகனேரி கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஆணை பிறப்பிக்கின்றாரா..? முதலில் நீங்களல்லவா வெளியேற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
20-ஆக-201911:01:24 IST Report Abuse
JeevaKiran நீர்நிலைகளின் மீது (ஏரி, குளம், குட்டை போன்றவை) சாலை அமைக்கவேண்டு என்றால் உயர்மட்ட தூண் அமைத்து (பாலம் போல்) சாலை அமைத்தால் அந்த பகுதி ஆக்ரமிப்பிலிருந்து காப்பாற்ற படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X