வட மாநிலங்களில் மழையால் கடும் பாதிப்பு

Added : ஆக 19, 2019
Advertisement
 வட மாநிலங்களில் மழையால் கடும் பாதிப்பு

புதுடில்லி:வட மாநிலங்களில், இரண்டு வாரங்களாக தொடரும் பலத்த மழையால், ஏராளமானோர் இறந்துள்ளனர்; மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
மீட்புப் பணியில், விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல ஆறுகளில், அபாய மட்டத்தை தாண்டி தண்ணீர் ஓடுகிறது. இதனால், கரையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், நீரில் அடித்து செல்லப்படுகின்றன.ஹிமாச்சல பிரதேசம்இந்த மாநிலத்தில், மூன்று நாட்களாக பெய்து வரும், மிக பலத்த மழைக்கு, 25 பேர் உயிர்இழந்துள்ளனர். 'அடுத்த, 24 மணி நேரத்திற்கு மழை தொடரும்' என, வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் நேற்று பீதியடைந்தனர்.பலத்த மழையால் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளால், பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ௫௦௦க்கும் மேற்பட்ட மக்கள், பல இடங்களில், நீரில் தத்தளித்தனர். நதிக்கரையோரங்களில் உள்ள நுாற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன; வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன.மலைகள் நிறைந்த இந்த மாநிலத்தில், பல இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழையால், ௫௦௦ கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான மாநில அரசு தெரிவித்து உள்ளது.உத்தரகண்ட்இந்த மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, டி.எஸ்.ராவத் முதல்வராக உள்ளார். இங்கே, மழைக்கு பலியானோர் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆறு பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. எனினும், ஞாயிறு மற்றும் நேற்று, மழை இடைவிடாமல் தொடர்ந்ததால், எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்கும் பணியில், இந்திய விமானப்படையின், மூன்று ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.மீட்புப் பணியில், மாநில போலீசாருடன், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
டில்லி
இங்கு, யமுனை நதியில், அபாய அளவை தாண்டி, ெவள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, முதல்வர், அரவிந்த் கெஜ்ரி வால், பல துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். நதிக்கரையோரம் வசித்த மக்கள், மேடான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
பஞ்சாப்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, உடனடி நிவாரணமாக, ௧௦௦ கோடி ரூபாய் வழங்கி, காங்., முதல்வர், அமரீந்தர் சிங், நேற்று உத்தரவிட்டுஉள்ளார். தண்ணீர் மட்டம் குறைந்ததும், பயிர் சேதம் கணக்கிடப்பட்டு, நிவாரணத் தொகை அறிவிக்கப்படும் என, மக்களுக்கு அவர் உறுதியளித்தார்.
ஹரியானாவிலும், மழை பாதிப்பு அதிகமாகவே உள்ளது. இங்கு, திடீரென பெருகிய ெவள்ளத்தில் சிக்கிய, ஆறு பேர், விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
மஹாராஷ்டிரா
இந்த மாநிலத்தின், மேற்கு பகுதி மாவட்டங்களான, கோலாபூர் மற்றும் சாங்கிலி, கடும் மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மழை தணிந்து, ஆறுகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதால், இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X