சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் அதிகரிப்பு

Added : ஆக 19, 2019
Share
Advertisement

காஞ்சிபுரம் : பருவநிலை மாற்றத்தால், காஞ்சிபுரத்தில் சளி, இருமல், காய்ச்சல் அதிரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கூடும் இடங்களில், நிலவேம்பு கஷாயம் வழங்குவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, சுகாதாரத் துறை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், இரு நாட்களாக பெய்த மழைநீர், வெளியேற வழியின்றி, குமார் தெரு, திருள்ளுவர் தெரு, ரயில்வே ரோடு, பாணக்கார தெரு உள்ளிட்ட பல இடங்களில் தேங்கியுள்ளது.ஏற்கனவே, பாவாபேட்டை தெரு, ரெட்டிப்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவது வாடிக்கையாக உள்ளது. மேலும், சேக்குபேட்டையில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் சமீபத்தில் பெய்த மழையால், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், சளி, இருமல், மற்றும் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், சிகிச்சைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று, அனுமதி சீட்டு பெறும் இடத்தில் நோயாளிகள் நீண்டநேரம் காத்திருந்தனர்.சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை முறையாக அகற்றவும், கழிவுநீர் தேக்கத்தை மற்றும் கொசு ஒழிப்பு பணியை, நகர் முழுவதும் தீவிரப்படுத்த வேண்டும்.மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லுாரி மற்றும் பொது இடங்களில், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்க, சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X