ம.பி., காங்., முதல்வர் கமல்நாத்தின் உறவினர்கள் மீது சி.பி.ஐ., வழக்கு

Added : ஆக 19, 2019
Advertisement
 ம.பி., காங்., முதல்வர் கமல்நாத்தின் உறவினர்கள் மீது சி.பி.ஐ., வழக்கு

புதுடில்லி:பல்வேறு வங்கிகளில், 354 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், மத்திய பிரதேச காங்., முதல்வர் கமல்நாத்தின் உறவினர், ரதுல் பூரி, அவரது தந்தை, தீபக் பூரி, தாயார், நீதா பூரி ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.
பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்ய, ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து, ஹெலிகாப்டர்கள் வாங்க, ஒப்பந்தம் போடப்பட்டது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.இதில், கோடிக் கணக்கில் ஊழல் நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.இந்த வழக்கில், மத்திய பிரதேச முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, கமல்நாத்தின் உறவினர், ரதுல் பூரி மீது, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்நிலையில், ரதுல் பூரி மீது, மேலும் ஒரு வங்கி மோசடி வழக்கை, சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.ரதுல் பூரி, 'மோசர்பேயர்' என்ற பெயரில், 'சி.டி., மற்றும் டி.வி.டி.,' தகடுகள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிறுவனத்தின் சார்பாக, 2009ல், பல்வேறு வங்கிகளில் இருந்து, 354 கோடி ரூபாய் கடன் பெற்றார்.இந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாமல், அவர் மோசடி செய்ததாக, 'சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா' தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, ரதுல் பூரியின் தந்தையும், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான, தீபக் பூரி, தாய், நீதா பூரி, மற்றும் இயக்குனர்கள், சஞ்சய் ஜெயின், வினீத் சர்மா ஆகியோர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இவ்வழக்கு தொடர்பாக, ரதுல் பூரியின் வீடு, அலுவலகம் உட்பட, ஆறு இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று முன் தினம் சோதனை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X