எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

'சுதந்திர தின உரை கருத்துகளே பரிந்துரைக்கப்படும்': புதிய கல்விக்கொள்கை குறித்து செங்கோட்டையன் தகவல்

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019
Advertisement
புதிய கல்விக்கொள்கை, அமைச்சர், தகவல்

''புதிய கல்விக்கொள்கை குறித்து, சுதந்திர தின உரையில், தான் கூறிய கருத்துக்களையே, மத்திய அரசிடம், தமிழக முதல்வர் பரிந்துரை செய்ய உள்ளார்'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


'சி.சி.டி.வி' கேமராக்கள்


தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நேற்று டில்லியில், மனிதவள மேம்பாட்டு அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், விளையாட்டுத்துறை இணை அமைச்சர், கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புகளின் போது, தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவியை, விரைந்து தரும்படி வலியுறுத்திய செங்கோட்டையன், பின், நிருபர்களிடம் கூறியதாவது:அனைத்து ஊராட்சிகளிலும், விளையாட்டுத்துறையை ஊக்கப்படுத்துவதற்காக, இந்த ஆண்டு, 64.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, 28 ஆயிரத்து, 957 கோடி ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் பள்ளிகளில், 'சி.சி.டி.வி' கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, நிதி ஒதுக்கும்படி மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம், கோரிக்கை வைத்தேன்.நிதியமைச்சர், தமிழகத்தின் பல்வேறு நிலைமைகளை பகிர்ந்து கொண்டார்.


உணர்வுளை வெளிப்படுத்தும்


வியைாட்டு துறை அமைச்சரிடம் பேசும்போது, சிம்லாவில் உள்ளது போல, தமிழகத்தின் நீலகிரி போன்ற உயரமான மலைப்பகுதிகளில், விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டுமென, கேட்டுக் கொண்டேன்.புதிய கல்விக் கொள்கை விஷயத்தில், தமிழக மக்களின் உணர்வுளை வெளிப்படுத்தும் வகையிலான கருத்துகளைத்தான், தன் சுதந்திர தின உரையில், முதல்வர் வெளிப்படுத்தியிருந்தார். அவற்றையே, தமிழக அரசின் சார்பில், அவர், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார்.இவ்வாறு, செங்கோட்டையன், கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X