பொது செய்தி

தமிழ்நாடு

அன்று கஞ்சா... இன்று உப்பு... வியாபாரியை திருத்திய இன்ஸ்பெக்டர்

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (10)
Advertisement
அன்று கஞ்சா... இன்று உப்பு... வியாபாரியை திருத்திய இன்ஸ்பெக்டர்

மதுரை, மதுரையில், பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வந்தவர், தற்போது, உப்பு வியாபாரியாக உழைத்து பிழைக்கிறார்.
மதுரை, மகபூப்பாளையத்தைச் சேர்ந்தவர், இப்ராகிம் ஷா, 54. இவர் மீது திலகர் திடல், திடீர் நகர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில், 10க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் உள்ளன.

புத்திமதி

பள்ளி பகுதிகளில் கஞ்சா விற்றதாக, தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்தார். இவர் மீது வழக்குகள் பதிவு செய்தே, போலீசார் ஓய்ந்து போயினர்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து, இப்ராகிம் ஷாவை அழைத்து, புத்திமதி கூறினார், பெண் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா.
இதில் தெளிவு பெற்ற இப்ராகிம் ஷா, 'திருந்தி வாழ ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்' என, கண் கலங்கினார்.இதையடுத்து, தன் செலவில் சைக்கிள், உப்பு மூட்டையை வாங்கிக் கொடுத்து, இப்ராகிம் ஷாவை உப்பு வியாபாரியாக மாற்றி, தொழிலை துவக்கி வைத்தார்.

பிளவர் ஷீலா கூறியதாவது:வழக்கு செலவு, வழக்கறிஞர் செலவு என, ஒவ்வொரு முறையும், இப்ராகிம் ஷாவுக்கு செலவு அதிகரித்துக் கொண்ட போனது. இதை ஈடுகட்டுவதற்காகவே, தொடர்ந்து கஞ்சா விற்று வந்தார். இதனால், மாணவர்கள் உள்ளிட்டோர் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவர் என்பதை விளக்கினேன்.

கண்காணிப்பு

உப்பு வியாபாரம் செய்வதன் மூலம் வழக்கு செலவுகள் இருக்காது எனவும், அவருக்கு தெளிவு
படுத்தினேன். தற்போது, ஸ்டேஷன் பகுதிகளில், உப்பு வியாபாரம் செய்து வருகிறார்.
அதே சமயம், மீண்டும் கஞ்சா வியாபாரம் செய்கிறாரா என, அவரை தொடர்ந்து கண்காணித்தும் வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
பெண் இன்ஸ்பெக்டரின் முயற்சியை, உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என, பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
20-ஆக-201920:07:34 IST Report Abuse
Babu வேற மாதிரி திருத்தினீங்கன்னா, புதுசா தொழில் செய்யணும்னு நெனைக்கிறவன் கொஞ்சமாச்சும் பயப்படுவான். கெட்டுப்போன விடலைகளின் வாழ்வு திரும்புமா? காவல்துறை குழந்தைகளுக்கானது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஆக-201911:21:26 IST Report Abuse
Nallavan Nallavan போதை மருந்து உபயோகிப்பது... அதை விற்பது... இதெல்லாம் ஹராம் -ன்னுவானுங்கோ.. ஆனா அந்த அசிங்கமெல்லாம் பண்ணுறது அதிகமா இவனுங்கதான்... போலிகள்.....
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-ஆக-201919:34:41 IST Report Abuse
Malick Rajaகுறிப்பிட்ட சமுதாயத்தை குறை சொல்வதையே தொழிலாக எவ்வளவு நாளைக்கு செய்யமுடியும் .. நண்பா மனிதனாக வாழ பழகு .. மருத்துவமனை சென்று பார் அங்குள்ள நோயாளிகளை கண்டு .. அது நமக்கு வராமல் இருக்கையில் எப்படி நல்ல மனிதனாக இருக்கவேண்டும் என்பதை நினைத்து மனிதனாக வாழ விளைவதே மனித மாண்பு .....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஆக-201911:18:56 IST Report Abuse
Nallavan Nallavan பகல்ல பார்த்தாப் போதாது ..... நைட்டும் கண்காணிச்சுப் பாருங்க ............ நைட்டு டயத்துல பெருசு எந்த ஹாஸ்டல் முன்னாடி என்ன விக்கிதோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X