சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தப்பியோடிய, 'கும்கி' முகாமில் பரபரப்பு

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019
Advertisement
 தப்பியோடிய, 'கும்கி' முகாமில் பரபரப்பு

கோவை:முகாமில் பாரமரிக்கப்பட்ட, 'கும்கி' யானை, சங்கிலியை விடுவித்து காட்டுக்குள் மாயமானதால், பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, போளுவாம்பட்டி வனச்சரம், சாடிவயல் பகுதியில், 'கும்கி' யானைகள் முகாம் செயல்படுகிறது. இங்கு, சுயம்பு, 20, வெங்கடேஷ், 39, என்ற கும்கி யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இதில், வெங்கடேஷ், டாப்சிலிப்பில் இருந்து, நேற்று முன்தினம் தான், கோவைக்கு அழைத்து வரப்பட்டது. நேற்று காலை, 10:30 மணியளவில், சங்கிலியால் கட்டப்பட்டிருந்த, 'வெங்கடேஷ்' திடீரென மாயமானது. வனத்துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள், பாகன்கள், யானையை தேடினர். நீண்ட தேடுதலுக்கு பின், சாடிவயல் அடர் வனத்துக்குள், யானை நின்றிருப்பதை கண்டனர். பாகன்கள் அறிவுறுத்தல்படி, வனத்தில் இருந்து, வனத்துறையினர் வெளியேறினர். மதியம், 2:45 மணிக்கு, முகாமுக்கு கொண்டு வரப்பட்ட வெங்கடேஷ், சங்கிலியால் மீண்டும் கட்டப்பட்டது. இந்த யானை, டாப் சிலிப்பிலும், அடிக்கடி சங்கிலியை அறுத்து, வனத்துக்குள் சென்றுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன், இதேபோன்று தப்பியுள்ளது. மூன்று குழுக்கள் அமைத்து, பல நாட்கள் தேடுதலுக்கு பின், கண்டுபிடிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வெங்கடேஷை எப்படி சமாளிப்பது என, போளுவாம்பட்டி வனத்துறை கடைநிலை ஊழியர்கள் புலம்ப துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X