லஞ்சத்துக்கு பஞ்சமில்லாத டாலர் சிட்டி ; வஞ்சம் தீர்க்க ஆளுங்கட்சியினர் ஏட்டிக்கு போட்டி| Dinamalar

'லஞ்சத்துக்கு' பஞ்சமில்லாத 'டாலர் சிட்டி' ; வஞ்சம் தீர்க்க ஆளுங்கட்சியினர் ஏட்டிக்கு போட்டி

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019
Share
சுதந்திர தின தொடர் விடுமுறை முடிந்து, கல்லுாரி செல்வதற்கான ஆயத்த பணிகளில் மித்ரா ஈடுபட்டு கொண்டிருந்தாள். அப்போது, சித்ராவிடம் இருந்து அழைப்பு வந்தது. ''ஹலோ... சொல்லுங்க்கா. நானே... கூப்புடணுமுன்னு இருந்தேன். கடைவீதிக்கு போய் சில பொருள் வாங்கணும். ஓ.கே., வாங்க. நான் ரெடியாயிட்டேன்,'' என்று பேசி விட்டு வைத்தாள்.சில நிமிடங்களில், வண்டியில் வந்தாள் சித்ரா. மித்ராவும்
 'லஞ்சத்துக்கு' பஞ்சமில்லாத 'டாலர் சிட்டி' ; வஞ்சம் தீர்க்க ஆளுங்கட்சியினர் ஏட்டிக்கு போட்டி

சுதந்திர தின தொடர் விடுமுறை முடிந்து, கல்லுாரி செல்வதற்கான ஆயத்த பணிகளில் மித்ரா ஈடுபட்டு கொண்டிருந்தாள். அப்போது, சித்ராவிடம் இருந்து அழைப்பு வந்தது. ''ஹலோ... சொல்லுங்க்கா. நானே... கூப்புடணுமுன்னு இருந்தேன். கடைவீதிக்கு போய் சில பொருள் வாங்கணும். ஓ.கே., வாங்க. நான் ரெடியாயிட்டேன்,'' என்று பேசி விட்டு வைத்தாள்.சில நிமிடங்களில், வண்டியில் வந்தாள் சித்ரா.
மித்ராவும் உட்கார, கடைவீதியை நோக்கி வண்டி சீறியது.''ஏங்க்கா... காஞ்சிபுரம் அத்திவரதர் கோவில் நிகழ்ச்சியில் பணியாற்றிய துப்புரவு ஊழியர் முதல் கலெக்டர் வரை அனைவருக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தாராம். ஆனா, பல லட்சம் பக்தர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று வரும் பணியில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை அவர் மறந்து விட்டார் பார்த்தீங்களா?''''கரெக்டா.. சொன்னே மித்து. கண்டிப்பா அவங்களையும் பாராட்டியிருக்கணும். மறந்துட்டாரு போல... இருந்தாலும், அதிகாரிங்களாவது, சி.எம்., கவனத்துக்கு கொண்டு போயிருக்கணும்,'' என்று ஆதங்கப்பட்டாள் சித்ரா.''அக்கா... கோர்ட் வீதியில் உள்ள போலீஸ் குவார்ட்டர்ஸில், காலியாக இருந்த பழைய வீடு ஒன்றில் தள்ளுவண்டி டிபன் கடைக்கு சமைக்கும் பணி நடந்து வந்ததுன்னு,
போன வாரம் நாம பேசினோமே,''''ஆமாண்டி... அதில் ஏதாவது...?''''தகவல் வெளியானதில், அதனை நடத்தி வந்த ஒரு பெண் போலீசின் கணவர், வீட்டை காலி செய்து, வேறிடத்தில் கடை வாடகைக்கு பிடித்து சமைக்கிறாராம்,''''அடடே.. பரவாயில்லையே'' என்ற சித்ரா, சிகப்பு விளக்கு ஒளிரவே, சிக்னலில் வண்டியை நிறுத்தினாள்.
அப்போது, கருமேகங்கள் கலைந்து வெயில் சுள்ளென்று அடித்தது.''என்ன, வெயில் திடீர்ன்னு இப்படி கொளுத்துகிறது,'' என்றாள் மித்ரா.''மித்து, நீ இதுக்கே இப்டிங்கறே....சுதந்திர தின விழாவன்று, அதிகாரிகளும், போலீசும் பட்டபாடு உனக்கு தெரியுமா?''''சொல்லுங்க...''''அட.. சுதந்திர தின விழாவில், விருது வாங்க, போலீசார், அரசு அதிகாரிங்க, ஊழியர், பணியாளர்னு, அனைவரையும், விழா நடந்த சிக்கண்ணா கல்லுாரி கிரவுண்டில், வரிசையா நிற்க வச்சுட்டாங்க.
8:35 மணிக்கு நின்னவங்க, 9:15 மணிக்குத்தான், சர்டிபிகேட் வாங்கினாங்க,''''யூசுவலா, ஸ்டேஜ் பக்கத்துல இருப்பாங்க, அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி வரிசையா நிப்பாங்க. இந்த தடவை, என்ன ஆச்சுன்னு தெரியலை. ரொம்ப நேரம் நின்னதால, சுகர், 'பிபி' எகிறி சிலர் மயங்கி விழற அளவுக்கு ஆகிட்டாங்க. அவங்களுக்கு தண்ணீர் கொடுத்து சமாளிச்சாங்க..'' என்றாள் சித்ரா.
பச்சை விளக்கு ஒளிரவே வண்டியை, கிளப்பினாள் சித்ரா. அப்போது, ஆளுங்கட்சி போஸ்டர் கண்ணில் படவே, ''ஏன், மித்து... மாவட்டத்தை மாத்தி ஆகணும்னு, மூணு பேரும் போயி சி.எம்., கிட்ட முறையிட்டாங்களாம்,''''ஆமாங்க்கா... புறநகர் மாவட்ட செயலாளர் பதவி ஏற்கனவே மாறிப்போயிருச்சு.

இப்ப, மாநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு, சிலர் குறிவச்சிருக்காங்க. இப்ப இருக்கிறவரு, சரியா கட்சி வேலை பார்க்கற தில்லைனு சொல்லி, எம்.எல்.ஏ.,க்கள் மூவரும், சி.எம்., கிட்ட பேசியிருக்காங்க,''''அப்படியா மித்து. இதையுங்கேளுக்கா. கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாம போச்சுன்னு சொல்வாங்களே. மேயர் பதவிக்கு குறி வைச்சாரு. இன்னும் எலக்ஷனே வரலே. லோக்சபா தேர்தலிலும் தோத்துட்டாரு. அதனால, இனி, எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. மேயர் பதவிய பிடிக்காம விடமாட்டேன்னு, 'ஆனந்த'மானவரு, சபதம் போட்டாராம்,''''இப்ப... என்னடான்னா.. அவர பதவியிலிருந்து துாக்கோணும்னு, எம்.எல்.ஏ.,க்கள் ஒருபக்கம் பிரச்னை பண்றாங்க.
இன்னொரு பக்கம், தினகரன் கட்சிக்கு தாவிய, 'சிவ'மானவரை, மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர்றதுக்கு முயற்சி நடக்குதாம். அவரும் வந்துட்டா... சிக்கல் ஜாஸ்தியாயிடும். அதுக்குள்ள ஏதாவது பண்ணியாகணும்னு, மா.செ., கோஷ்டியினர் மார் தட்டிட்டு 'அன்டர்கிரவுண்ட்'டில் வேலை செய்யறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''நடக்கறதெல்லாம் பார்த்துட்டு, இனி நமக்கு, 'ஆனந்தமே' இருக்காது போல, என்று சொல்லி, தனது அடிப்பொடிகளிடம், மாஜி புலம்பி தள்றாராம்,'' சொன்ன மித்ரா, ''அக்கா... சவுத் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில இருக்கிற புக் ஸ்டோர் முன் நிறுத்துங்க,'' என்றாள்.வண்டியை பார்க் செய்து விட்டு, இருவரும் புக் ஸ்டோருக்குள் சென்றனர். ஓரிரு நிமிடங்களில், 'நோட்ஸ்' வாங்கி விட்டு, இருவரும் புறப்பட்டனர்.சவுத் போலீஸ் ஸ்டேஷனை பார்த்த மித்ரா, ''அக்கா... இந்த ஸ்டேஷனில், ஒருத்தர் ஓவரா ஆட்டம் போடறாராம். ஸ்டேஷனில் இவரின்றி ஒரு அணுவும் அசையாதுன்னு சொல்லிட்டு, தன்னிஷ்டம் போல 'செல்வ' செழிப்புடன் நடந்துக்கிறாராம்,''''ஆமாமா... நானும் கேள்விப்பட்டேன். அந்த ஸ்டேஷன் அதிகாரிதான் நடவடிக்கை எடுக்கோணும்,''
''ம்... ஹூம்.. அவரு எடுக்கற மாதிரி தெரியலைங்க்கா,''''பொறுத்து பார்க்கலாம், என்ன நடக்குதுன்னு? ஏன்... மித்து, சிட்டியில் 'கேம்பிளிங்' கேங் சிக்கியது எப்படின்னு உனக்கு தெரியுமா?''''ஆமாங்க்கா... பல இடங்களில், 'கேம்பிளிங்' நடப்பதை அறிந்த கமிஷனர், ஸ்டேஷன் லிமிட் மாத்தி, டீம் அனுப்பி ரெய்டு பண்ண வச்சாரு.
அதுக்கு, பலன் நல்லாவே கிடைச்சுது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசுக்கே தெரியாம, நடந்ததால, தலை 'கிறுகிறு'த்து போயிடுச்சாம்,'' என்று கூறி சிரித்தாள்.''இல்லப்பா, கமிஷனர் இன்னும் பல அதிரடிகளை செஞ்சா தான், 'டாலர் சிட்டி' நல்லாயிருக்கும். ஆனா, அவர் ஆபீசை விட்டு, வெளியே வர்றதில்லை.
இதனால, லஞ்ச போலீசார், தொடர்ந்து தங்களது ஆட்டத்தை ஆடிட்டே இருக்காங்களாம்டி,''''உண்மைதானுங்க்கா. ஏங்க்கா...! எஸ்.பி., ஆபீசில் இருந்து, இனி எந்த நியூஸூம் தகவலும் போக கூடாதுன்னு, 'ஸ்டிரிட்டா' அந்த அதிகாரி சொல்லிட்டாராம்,''''ஏன்டி... அப்படிசொன்னாங்களாமா?''''எஸ்.பி., டிரான்ஸ்பருக்கு அப்புறம் வந்துள்ள ஒரு அதிகாரிதான், இப்படி சொன்னாங்களாம். இப்படியிருந்தா, மக்களுக்கு எப்படி நல்லது செய்வாங்களாம்?'' என்று கோபமாக பேசினாள் மித்ரா.''மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருக்கிற பத்திரிகைக்கு நியூஸ் தராமல் வேறென்ன செய்ய போறாங்களாம்.
இப்பப்பாரு, தாராபுரத்தில் லாட்டரி விக்கிறதுக்கு, போலீசை 'செமையா' கவனிக்கிறாங்களாம். இதுக்கு என்ன பண்றது?''''ஏற்கனவே, அங்கே, ஈரோட்டை சேர்ந்த ஒரு கும்பல் படுஜோரா லாட்டரிவிக்கிறாங்க. இப்ப, இன்னொரு கும்பலும் சேர்ந்தாச்சு. சரளமா புழங்குற லாட்டரியை பார்த்தா, நாம என்ன கேரளாவில் இருக்கிறோமா?ன்னு, பலரும் கிண்டல் பண்றாங்களாம்,'' என்ற சித்ரா,
வண்டியை பேன்ஸி ஸ்டோர் முன் பார்க்கிங் செய்தாள்.''ஏற்கனவே, ரூரல் ஸ்டேஷன்களில், பல சட்ட விரோத செயல்களுக்கு, கட்டுக்கடங்காத லஞ்சம் கைமாறும் சூழலில், புதுசா வந்திருக்கிற அதிகாரியாவது கண்டுகிட்ட பரவாயில்லை,'' என்று கூறியவாறே கடைக்குள் நுழைந்த சித்ராவை பின் தொடர்ந்த மித்ரா, ''நீங்க சொல்றது சரிதான். அவங்க சாட்டையை சுற்ற இந்த மினிஸ்டர் விட்டாதானே..!!'' என்று கூறி சிரித்தாள்.''அது அப்படித்தான். இந்த வி.ஏ.ஓ.,வை ஒருமையான வார்த்தையில் திட்டிய கூட்டுறவு சங்க தலைவரை பத்தி தெரியுமா'' என்றாள் சித்ரா.''தெரியாதுங்க்கா...''''மித்து... அம்மா திட்டம் முகாமை, சிவன்மலையில் நடத்த, கூட்டுறவு சங்க தலைவர் வி.ஏ.ஓ., விடம் தெரிவித்தார்.
கடிதம் கொடுங்கள், அம்மா திட்டம் முகாமை அங்கு நடத்தலாம் என வி.ஏ.ஓ., சொன்னதற்கு, 'கட்சி விழா மாதிரி முகாமை 'கிராண்டா' நடத்த வேண்டும் என, சங்க தலைவர் சொன்னாராம்,''''ஆனால், அவரோ, அந்தளவுக்கு செலவு செய்ய முடியாது என கூறி, வேறு இடத்தில் முகாமை நடத்தி முடித்தார். ஆத்திரமடைந்த சங்க தலைவர், கலெக்டரிடம், வி.ஏ.ஓ.,வை பற்றி தாறுமாறாக சொல்லியுள்ளார்.
இதையறிந்து அவரை, ஒருமையில் திட்டியதோடு, 'உன்னை 'டிரான்ஸ்பர்' செய்துவிடுவேன் என மிரட்டி உள்ளார்.''''இதனால், அரசு ஊழியர் சங்கத்தினர், இப்பிரச்னையை மையமாக வைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனராம்,'' என்ற சித்ரா, ''சரி... வாடி மித்து. மழை வர்ற மாதிரி இருக்குது, கிளம்பலாம்,'' என வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X