வேலைக்காரங்களுக்கு கிடைக்கலை சர்ட்டிபிகேட்; சுதந்திர தின விழாவுல அப்செட் | Dinamalar

'வேலைக்காரங்களுக்கு' கிடைக்கலை சர்ட்டிபிகேட்; சுதந்திர தின விழாவுல 'அப்செட்'

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019
Share
வெளியூர் செல்வதற்காக, கோவை, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்டுக்கு சித்ராவும், மித்ராவும் வந்திருந்தனர். பேக்கரி ஒன்றில் டீ சாப்பிட அமர்ந்தனர். ''அக்கா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி தானே, பஸ் ஸ்டாண்டுக்குள்ள இருந்த கடைகளை எடுத்தாங்க. மறுபடியும் முளைச்சிடுச்சே...'' என, ஆரம்பித்தாள் மித்ரா.''ஆமா மித்து, ஆக்கிரமிப்பு கடைகளை கார்ப்பரேஷன் டவுன் பிளானிங் ஆபிசருங்க
 'வேலைக்காரங்களுக்கு' கிடைக்கலை சர்ட்டிபிகேட்; சுதந்திர தின விழாவுல 'அப்செட்'

வெளியூர் செல்வதற்காக, கோவை, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்டுக்கு சித்ராவும், மித்ராவும் வந்திருந்தனர். பேக்கரி ஒன்றில் டீ சாப்பிட அமர்ந்தனர். ''அக்கா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி தானே, பஸ் ஸ்டாண்டுக்குள்ள இருந்த கடைகளை எடுத்தாங்க. மறுபடியும் முளைச்சிடுச்சே...'' என, ஆரம்பித்தாள் மித்ரா.

''ஆமா மித்து, ஆக்கிரமிப்பு கடைகளை கார்ப்பரேஷன் டவுன் பிளானிங் ஆபிசருங்க எடுக்குறாங்க. ரெண்டு நாள் கழிச்சு, மறுபடியும் கடை வைக்க ஆரம்பிச்சிடுறாங்க. கடுமையா நடவடிக்கை எடுக்காத வரைக்கும், பிரச்னை தொடர்ந்துட்டுதாம்ப்பா இருக்கும்''பஸ் ஸ்டாண்ட் வளாகம் சுத்தமா இருக்கிறதை பார்த்து ஆச்சரியப்பட்ட மித்ரா, ''இப்ப, ராத்திரி நேரத்திலும் குப்பை அள்ளுறாங்களாமே...''

''ஆமாப்பா, 'ஸ்வட்ச் பாரத்' திட்டத்துல, இந்த தடவை முதல் அஞ்சு இடத்துக்குள்ள வரணும்னு, கார்ப்பரேஷன் அதிகாரிங்க ஆசைப்படுறாங்க. ஆனா, 'டிரான்ஸ்பர்' கொடுத்ததில், சுகாதார ஆய்வாளர்கள் சில பேரு, இன்னமும் மனம் ஒட்டாம வேலை பார்த்துட்டு இருக்காங்க. அதை தெரிஞ்சுக்கிட்ட கார்ப்பரேஷன் கமிஷனர், 'ரெவ்யூ மீட்டிங்'கில், கடுமையா 'வார்னிங்' கொடுத்திருக்கிறாராம்,''

''அதெல்லாம் சரி... சுதந்திர தின விழாவுல, நற்சான்று வழங்குற பட்டியல்ல, அவுங்க பெயரை எடுத்துட்டாங்களாமே...''''அதுவா, ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டிலும் சிறப்பா வேலை பார்த்தவங்க 'லிஸ்ட்' எடுத்து, நற்சான்று கொடுத்திருக்காங்க. அதுல, சுகாதார ஆய்வாளர்கள் பெயரை விட்டுட்டாங்க. லோக்சபா எலக் ஷன் டியூட்டி பார்த்தவங்க லிஸ்ட்டுல, ரெண்டு பேர் பெயர் இருந்துச்சாம்.

கடைசி நேரத்துல, அதையும் நீக்கிட்டாங்களாம்...''''அப்புறம்...''''அந்த ரெண்டு பேருதான், ரெண்டு பெரிய ஆபீசர்களின் வீட்டுக்கு 'தேவை'யானதை செஞ்சு கொடுக்கிறாங்களாம். இருந்தாலும், நற்சான்று கொடுக்காதது, அவங்க மத்தியில புகைச்சலா ஓடிட்டு இருக்கு,'' என்றாள்.இஞ்சி டீ சாப்பிட்டு விட்டு, திருப்பூர் செல்லும் பஸ்சில் இருவரும் ஏறி அமர்ந்தனர்.அப்போது சித்ரா, ''ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யை வக்கீல்கள் சந்தித்து பேசுனாங்களாமே... என்னாச்சு, ஏதேனும் பிரச்னையா,'' என, நோண்டினாள்.

''அதுவாக்கா, கோவை பப்ளிக் புராசிக்யூட்டரா இருந்தவரு (பி.பி.,) லோக் ஆயுக்தா மெம்பராகி, சென்னைக்கு போயிட்டாரு. அவருக்கு பதிலா, 'டான்பிட்' கோர்ட் ஏ.பி.பி.,க்கு இன்சார்ஜ் போட்டிருக்காங்க. பி.பி., பொறுப்பை கைப்பத்துறதுக்கு, ஏ.பி.பி.,கள் பலரும் முட்டி மோதியும், வாய்ப்பு கெடைக்கலை.''அப்புறம், காலியா இருக்கிற நான்காவது ஏ.டி.ஜே., கோர்ட் ஏ.பி.பி., போஸ்ட்டுக்கு, வக்கீல் அப்பாயின்ட்மென்ட் பண்ண, இன்டர்வியூ நடந்துச்சு. இதுல கலந்துக்கிட்ட வக்கீல்கள்ல ஒருத்தருக்கு, 'இன்சார்ஜ்' கொடுக்காம, மகளிர் கோர்ட் வக்கீலுக்கு, கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்காங்க.''இந்த ரெண்டு விவகாரமும், வக்கீல்கள் மத்தியில, வெவகாரமா ஓடிட்டு இருக்கு.

அதனால, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யை பார்த்து, முறையிட்டுட்டு வந்திருக்காங்க,''''ஓ... அப்படியா,'' என, ஆச்சரியப்பட்ட சித்ரா, ''ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருத்தரு, பத்திரிகைகாரங்க கேட்ட கேள்வியால, அரண்டு ஓடிப்போயிட்டாராமே...''''அதுவா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கவர்ன்மென்ட் ஆஸ்பிட்டல்ல விழா நடந்துச்சு. அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துக்கிட்டாரு. அவர்ட்ட பேட்டி எடுக்குறதுக்காக, செய்தியாளர்கள் காத்துக்கிட்டு இருந்தாங்க. அங்க வந்த எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன், ஏகப்பட்ட மைக் இருக்கிறதை பார்த்ததும், ''வேணும்னா, நான் பேட்டி கொடுக்கட்டுமா,''ன்னு, ரிப்போர்ட்டர்சை நோண்டியிருக்காரு.

''உடனே நிருபர் ஒருத்தரு, 'காலியா இருக்கற அமைச்சர் பதவி கொடுக்கணும்னு, பேட்டி கொடுங்கண்ணே...' எனச் சொல்ல, 'ஏம்ப்பா... நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா... ஆளை விடுங்கப்பா...'ன்னு அந்த எம்.எல்.ஏ., ஓடிட்டாராம்,''''அதெல்லாம் சரி, அமைச்சர் வந்துட்டு போனாலும், சுகாதாரத்துறை செயல்பாடே இல்லாம, சுணங்கி இருக்காமே...''''ஆமாக்கா, புறநகர் பகுதியில ஏகப்பட்ட போலி டாக்டர்ஸ் இருக்காங்களாம். கருக்கலைப்பு செய்றதுக்கு ஏகப்பட்ட பேரு, இவர்கள் நடத்துற கிளினிக்கிற்கு வந்துட்டு போறாங்களாம். சமீபகாலமா கருக்கலைப்பு அதிகரிச்சிட்டு இருக்காம். போலி டாக்டர்களை கண்டுபிடிக்க நியமிச்ச சிறப்பு குழு, வேலை செய்றதே இல்லையாம்,'' என்றாள் மித்ரா.

அப்போது, பஸ், ஏர்போர்ட் சிக்னலை கடந்து சென்றது. ஒரு விமானம் தரையிறங்கும் சத்தம் கேட்டது. அதைக்கேட்ட சித்ரா, ''விமான நிலைய விரிவாக்கத்துக்கு நியமிச்ச அதிகாரி, இன்னும் 'ஜாயின்' பண்ணவே இல்லையாமே...'' என, கேட்டாள்.''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். நீலகிரி மாவட்டத்துல வேலை பார்த்த முருகையாங்கிற அதிகாரியை தான் நியமிச்சாங்க. 20 நாளாச்சு; இன்னும் 'ஜாயின்' பண்ணாம இருக்காரு. இந்த நிலையில, எந்த மீட்டிங்கில கலந்துக்கிட்டாலும், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யப் போறோம்; தொழில்துறைக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு.''வேலைவாய்ப்பு பெருக போகுதுன்னு ஆளுங்கட்சிக்காரங்க அள்ளி விடுறாங்க.

உண்மை நிலைமையை, முதல்ல, அவுங்க புரிஞ்சிக்கிட்டு நடவடிக்கை எடுத்தா தேவலை,''''மாஜி அமைச்சருக்கு கட்சியில, முக்கிய பொறுப்பு கொடுக்கப் போறதா கேள்விப்பட்டேனே... உண்மையா,'' என, நோண்டினாள் சித்ரா.

''ஓ.பி.எஸ்., அணியில இருந்து வந்தவங்களை, ஓரங்கட்டி வச்சிருக்கிறதால, ரொம்பவே 'அப்செட்'டுல இருந்தாங்க. 'மாஜி' அமைச்சருக்கு கட்சியில முக்கியப் பதவி கொடுக்கப் போறாங்களாம். உள்ளாட்சி துறை தேர்தல் நடத்துனா, எல்லா செலவையும் பாத்துக்கிறேன்; ஜெயிச்சுக் காட்டுறேன்னு உறுதி சொல்லியிருக்காராம் 'மாஜி'. அடுத்த வாரத்துக்குள்ள அறிவிப்பு வரும்னு பேசிக்கிறாங்க,''

''அப்ப, உள்ளாட்சி தேர்தலுக்குள்ள ஆளுங்கட்சியை பலப்படுத்தப் போறாங்கன்னு சொல்லு,''''ஆமாக்கா, நம்ம மாவட்டத்தையும் ரெண்டா பிரிக்கப் போறாங்களாம். பொள்ளாச்சியை தலைமையிடமா வச்சு, புது மாவட்டம் உருவாக்க போறாங்களாம். ஏற்பாடு ஜரூரா நடந்துக்கிட்டு இருக்காம்,'' என்ற மித்ரா, ''ஸ்கூல் குழந்தைகளுக்கு குறுமைய விளையாட்டு போட்டி நடந்துக்கிட்டு இருக்கு. ஆம்புலன்ஸ் வசதி இல்லாம, எந்த பாதுகாப்பும் இல்லாம, போட்டி நடத்திக்கிட்டு இருக்காங்களாம்,'' என்றாள்.

''அச்சச்சோ... அப்புறம்''''போட்டி நடத்துறதுக்காக, ஒவ்வொரு குறு மையத்துக்கும் பள்ளி கல்வித்துறை சார்புல, 92 ஆயிரத்து, 600 ரூபா ஒதுக்குறாங்க. போட்டியில கலந்துக்கிற குழந்தைகளுக்கு அடிபடுறதுக்கு வாய்ப்பு இருக்கு. உடனடியா சிகிச்சை கொடுக்கிறதுக்கு, எப்பவுமே மருத்துவ குழு தயாரா இருக்கணும்.

ஆம்புலன்ஸ் கூட இல்லாம, போட்டிகளை, 'அசால்ட்'டா நடத்திக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.அப்போது, பஸ் நீலாம்பூரை கடந்து, பைபாஸில் செல்ல ஆரம்பித்ததும், கையில் வைத்திருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள் சித்ரா. தனக்கு வந்திருந்த, 'வாட்ஸ் ஆப்' பதிவுகளை பார்க்க ஆரம்பித்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X