பொது செய்தி

இந்தியா

பாக்.,குடன் போருக்கு தயாராக இருந்த ராணுவம்

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான போருக்கு, இந்திய ராணுவம் தயாராக இருந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.






ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இந்தாண்டு பிப்.,ல் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.





இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள பயங்கரவாத முகாம்களை, நமது விமானப் படை தாக்குதல் நடத்தி அழித்தது. இதற்கு முன்பாக, முப்படைகளுடன், மத்திய அரசு நடத்திய ஆலோசனையின்போது, பாகிஸ்தானுடன் போர் நடத்துவதற்கு தயாராக உள்ளதாக, ராணுவம் தெரிவித்திருந்தது. இந்தத் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.





குறிப்பிட்ட சில, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுடன், ராணுவத் தளபதி, ஜெனரல், பிபின் ராவத் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் இதை தெரிவித்ததாக, முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. அப்போது, பாகிஸ்தானுடன் போர் செய்வதற்கு தயாராக உள்ளதாக, ராணுவம் கூறியுள்ளது.





இதற்கு முக்கிய காரணம், கடந்த சில ஆண்டுகளில், ராணுவத்துக்கு தேவையான பல ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கப்பட்டிருந்தன. குறிப்பாக, 2016ல் நடந்த உரி தாக்குதலுக்குப் பிறகு, 11 ஆயிரம் கோடி ரூபாயில், ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதில், 95 சதவீதம் ராணுவத்துக்கு வந்து சேர்ந்திருந்தது.





இதைத் தவிர, பல்வேறு முக்கிய தளவாடங்கள் வாங்குவதற்காக, 7,000 கோடி ரூபாயில், 33 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தன. அதைத் தவிர, 9,000 கோடி ரூபாயில் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தங்களிலும், ஆயுதங்கள் எந்த நேரத்திலும் வருவதற்கான சூழ்நிலை இருந்தது. தற்போது, நமது ராணுவம், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முழு அளவில் தயாராக உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Mozhi - salem,இந்தியா
21-ஆக-201909:24:28 IST Report Abuse
Tamil Mozhi ஜெய் hind
Rate this:
Share this comment
Cancel
Sundar - Coimbatore,இந்தியா
20-ஆக-201914:22:01 IST Report Abuse
Sundar பிஜேபி நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சி. நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதனால் மிலிட்டரி நவீன மயமாக்குதலில் அக்கறையுடன் ஈடுபட்டு செய்துவருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் மிலிட்டரி மீது அக்கறை செலுத்தாமல் மட்டும் இல்லாது அவர்களை சுதந்திரமாக செயல் பட விடவுமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஆக-201911:09:33 IST Report Abuse
Nallavan Nallavan இந்தச் செய்திப்படி பார்த்தா 2016 க்கு முன்னாடி உரி, புல்வாமா மாதிரி தாக்குதல் நடந்திருந்தா இந்தியா கையைக் கட்டிக்கிட்டு அமைதி காத்திருக்கும் ............. இல்லையா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X