மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை

Added : ஆக 20, 2019 | கருத்துகள் (22)
Advertisement
மளிகை கடை, மது ,ஜார்கண்ட், பரிந்துரை, கலால்

ராஞ்சி, : ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில், மது விற்பனை செய்ய அனுமதி அளிக்க, கலால் துறை பரிந்துரை செய்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில், முதல்வர், ரகுபர் தாஸ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில், ஏலம் வாயிலாக, தனியாருக்கு, மதுக்கடைகள் நடத்தும் உரிமம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, 2017 முதல், மாநில அரசே, மதுக்கடைகளை நடத்த துவங்கியது.இதில், எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததை அடுத்து, 2019 ஏப்ரல் முதல், மதுக்கடைகள் நடத்தும் உரிமம், மீண்டும் தனியாருக்கே வழங்கப்பட்டது.

இந்நிலையில், மது விற்பனை மூலம், 1,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நோக்கத்தில், மளிகை கடைகளிலும், மது விற்பனை செய்ய அனுமதி அளிக்க, கலால்துறை முடிவு செய்தது. ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும், மளிகை கடைகளுக்கு, மது விற்பனை செய்ய உரிமம் வழங்கலாம் என, கலால் துறை பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை, முதல்வரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின் மீது, முதல்வர் அலுவலகம், சில கேள்விகளை எழுப்பி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27-ஆக-201906:16:53 IST Report Abuse
skv srinivasankrishnaveni vabareetha kaale vinaasa budhdhi
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
20-ஆக-201911:36:40 IST Report Abuse
Rengaraj இது மோசமான முன்னுதாரணம். ஒரு அரசு இந்த நிலைக்கு செல்லக்கூடாது. குடிகாரர்கள் எங்கு விற்றாலும் குடிப்பார்கள். ஒரு ஊருக்கு ஒரே கடைதான் என்றாலும் அதில் லைன் கட்டி நின்று வாங்கி குடிப்பார்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது டோர் டெலிவரி . இதற்கு என்று ஒரு கம்பெனி ஆரம்பித்து அதன் மூலம் வீடு வீட்டுக்கு டெலிவரி பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். எனவே அரசு மளிகை கடை என்று மது விற்பனையை எளிமை படுத்தக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா
20-ஆக-201910:59:54 IST Report Abuse
LovelyMarees ஜார்க்கண்ட் மாநில அரசு அலுவலர்கள் தமிழகம் வந்து இங்கு உள்ள மதுபானவிற்பனைக்கூடத்தை பார்வையிடுங்கள். மக்கள் வரிபண்ணத்தில்தானே நீங்கள் பயணம் செய்யபோவது. இல்லையென்றால் இங்குஉள்ள இரு கழ(ள)க குஞ்சுகளை பார் மற்றும் மதுபானவிற்பனைக்கூடத்தை நடத்த அழைப்பு விடுங்கள் உடனே உங்கள் மாநிலத்தில் விற்பனைசெய்ய வந்துருவாங்கே. அல்லது தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கைவையுங்கள் தமிழக அரசின் மதுபானவிற்பனைக்கூடத்தின் கிளையை ஜார்க்கண்டு மாநிலத்திலும் தொடங்கவேண்டும்யென்று. இரு மாநில அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளுங்கள். தமிழக அரசும் ஜார்க்கண்ட் மாநில அதிகாரிகள் கூறியதுபோல நீங்களும் மளிகைக்கடையில் மது விற்பனைசெய்யும் முறையை சோதனைமுறையில் சென்னையில் தொடங்குங்கள் வெற்றிபெற்றால் மாநிலம்முழுவதும் செயல்படுத்துங்கள். மக்கள் என்றுமே தெளிவாகவும் சிந்திக்கும் மனநிலையில் இருக்கவிடமால் செய்தால்தான் நாட்டில் இருக்கும் வளங்களையும், வருமானங்களையும் கொள்ளையடித்துகொண்டேயிருக்கமுடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X