அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வுடன் தீபா பேரவை இணைந்ததாக அறிவிப்பு

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (15)
Advertisement
அண்ணன் மகள்,A.D.M.K,ADMK,Deepa,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,ஜெ.,தீபா

சென்னை: ''எம்.ஜி.ஆர்., அம்மா - தீபா பேரவை, அ.தி.மு.க.,வில் இணைக்கப்படும்,'' என, ஜெ., அண்ணன் மகள், தீபா கூறினார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: என் அத்தை, ஜெயலலிதா, தனக்கு பின், 100 ஆண்டுகள், அ.தி.மு.க., இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது லட்சியக் கனவை நிறைவேற்ற, நாங்கள் நடத்தி வந்த இயக்கத்தை, அ.தி.மு.க.,வில் இணைக்க முடிவு செய்தோம். என் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தீவிர அரசியல் பணிகளோ, அலுவலகப் பணிகளோ செய்ய முடியாமல், ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளேன். தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, இனி, தீபா பேரவை, அ.தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படும். எவ்வித நிபந்தனையுமின்றி இணைந்து உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். சமீபத்தில், அரசியலிலிருந்து விலகுவதாக, தீபா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஆக-201908:17:59 IST Report Abuse
skv srinivasankrishnaveni நம்மதேசத்துலேயே ஈஸியான வேலை தன்னைத்தலைவியார் தலைவனாக்கிண்டுட்டு ஒருகாட்ச்சி ஆரம்பிப்பதுதான் அடகண்றாவியெ என்றுதான் ஒழியுமிந்த அபத்தம் வர தேர்தல்லே நோ அதிமுக என்று சுடாலின் சொல்லினேனே இருக்காங்க அதனால் தமிழனுக்கு விமோசனம் இல்லீங்க அவனுக்கு தேவை திரும்பின இடமெல்லாம் டாஸ்மாக் கண்கடைடமெல்லாம் ஓசில பிரியாணி வீட்டுலே மனவிபிள்ளைகுட்டி எல்லாம் கோவிந்தா பொண்டாட்டி பத்து தேய்ச்சு குடும்பகாப்பாள் அவளிடமிருக்கும் காசை புடுங்கினுஓடுவான் டாஸ்மாக் நோக்கி கஸ்மாலம் அரசுக்கு ஒரேவருமானம் டாஸ்மாக் என்ற பணம் கொட்டும் வாங்கியேதான் நாசமாப்போக
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
20-ஆக-201922:44:30 IST Report Abuse
bal அப்படின்னு ஒன்னு இருக்கா..இல்லாத ஒன்றை இணைப்பதா...
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
20-ஆக-201913:41:12 IST Report Abuse
சீனி நீ, உங்க ஊட்டுக்கரரு, டிரைவர், வேலைக்காரி நாலுபேரும் சேர்ந்து லெட்டர்பேடுல கட்சின்னு ஒன்னு ஆரம்பிச்சு, அதுக்கு இணைப்பு விழா வேற. என்னம்மா இப்படி கிச்சுகிச்சு மூட்டிக்கிட்டு, அப்படி ஓரமா தள்ளி நில்லுமா.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X