கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்துக்கு முன் ஜாமின் கிடைக்குமா?

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (59)
Advertisement

சென்னை: ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனு மீது, இன்று(ஆக.,20) தீர்ப்பளிக்கப்பட உள்ளது.






சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்த போது, 2007ம் ஆண்டில், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து, 350 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம், அனுமதி அளித்தது. இதில், சிதம்பரத்தின் மகன், கார்த்தியின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இதே போல, சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது, ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையிலான 3,500 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு தொடர்பாகவும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.





இவ்விரு வழக்குகளிலும், விசாரணையில் இருந்து சிதம்பரம் நழுவுவதாகவும், எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும், இரு விசாரணை அமைப்புகளும் தெரிவித்தன. இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகவும், ஆனால், தன்னை கைது செய்யக்கூடும் என்றும் தெரிவித்து, முன் ஜாமின் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இரு வழக்குகளிலும், சிதம்பரத்தை கைது செய்ய, தடை விதித்து, 2018, ஜூலை 25ல், நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இதற்கான தடை, அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி, 25ல், விசாரணை முடிவடைந்து, தீர்ப்பை ஒத்திவைத்து, நீதிபதி சுனில் கவுர் அறிவித்தார்.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன வழக்கில், சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனு மீது, டில்லி உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharatha Nesan - Chennai,இந்தியா
20-ஆக-201918:24:42 IST Report Abuse
Bharatha Nesan சிதம்பரம் என்று அசகான பெயரை வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு இந்திய மக்களுக்கு எதிராக பதவிக்காகவும் பணத்துக்காகவும் காங்கிரஸிடம் சேர்ந்துகொண்டு, இவர் செயத துரோகங்கள் பல பல , அதற்காக இவர் தண்டிக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
20-ஆக-201915:07:41 IST Report Abuse
Girija இவ்வளவு பேசும் உச்ச நீதிமன்றம் 2 ஜி தீர்ப்பை ஏன் கண்காணிக்கவில்லை? அதுபோகட்டும் சுமோட்டாவாக ஏன் விசாரிக்கவில்லை? ஷைனியை விட மூத்த நீதிபதிகள் இருக்கும் போது (இவர் ஜெ வழக்கு நீதிபதி சின்ஹாவிற்கு ஜூனியர்) இது விசாரணை கோர்ட் , உச்ச நீதிமன்றம் அல்ல , இவரை தேர்ந்தெடுத்தது எப்படி?
Rate this:
Share this comment
Cancel
S.Bala - tamilnadu,இந்தியா
20-ஆக-201913:58:00 IST Report Abuse
S.Bala இப்பதான் டீல் முடிஞ்சுது ,அதுதான் தீர்ப்பு எழுத போறார்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X